HIGHLIGHTS
A+ R A-

கோடி கோடியாய் கொட்டுகிறது !!

E-mail Print PDF

அதிரடியாய் பணக்காரர்கள் ஆவதற்கு சினிமாவில் நுழைந்தாலே போதும் என்பது போல் ஆகி விட்டது இப்போதெல்லாம்.

 

1. ரஜினி -  "எந்திரன்" படத்துக்கு அவர் பெற்ற சம்பளம் 23 கோடி. "கோச்சடையான்" மகள் படம் என்பதால் சம்பளம் வாங்காமல் நடிக்கிறார். ரஜினி அடுத்து வெளி பேணர்களில் நடித்தால் 50 கோடி சம்பளம் தர பல நிறுவனங்கள் தயாராக இருக்கிறது.

2.கமலுக்கு - கமலை பொறுத்தவரை இவ்வளவு தான் சம்பளம் என்று பிக்ஸ் பண்ணிக்கொள்ள மாட்டார். வெற்றிகளுக்கு ஏற்ப ஏற்றி இறக்கி வாங்குவார். "தசாவதாரம்" படத்துக்கு 10 கோடி சம்பளம் கொடுத்தார் ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன். அடுத்து அவர் நடித்த உன்னைபோல் ஒருவனும், விஸ்வரூபமும் சொந்தப் படங்கள். விஸ்வரூபம் வெற்றி பெற்று விட்டதால் தற்போது தன் சம்பளத்தை 25 கோடியாக பிக்ஸ் செய்திருக்கிறார்.

3 & 4 : விஜய் & அஜித்

10 கோடி வரை சம்பளம் பெற்றுக் கொண்டிருந்த விஜய் "துப்பாக்கி" ஹிட்டுக்கு பிறகு 15 கோடியாக உயர்த்தி விட்டார். "தலைவா"வுக்கும் "ஜில்லா"வுக்கும் உயர்த்திய சம்பளத்தைத்தான் வாங்குகிறார். 2014ல் தன் சம்பளத்தை 20 கோடியாக உயர்த்துவார். ஒருவேளை தலைவாவும், ஜில்லாவும் சரியாக போகவில்லை என்றால் மீண்டும் 10 கோடியிலிருந்து கணக்கை துவக்குவார்.

அஜித் 8 முதல் 12 கோடி வரை ஆளுக்கு தக்கபடி பெற்றுக் கொள்வார்."பில்லா 2" வுக்கு அவர் வாங்கிய சம்பளம் 12 கோடி. ஏ.எம்.ரத்தினம் தயாரிப்பில் தற்போது நடித்து வரும் படத்துக்கு சம்பளம் கேட்கவில்லை. படத்தின் லாபத்தில் இத்தனை சதவிகிதம் கொடுங்கள் என்று பேசியிருப்பதாக தகவல். காரணம் தயாரிப்பாளர் இப்போது சம்பளம் கொடுக்கும் நிலையில் இல்லை. அடுத்து விஜயா புரொடக்ஷன் தயாரிக்கும் படத்துக்கு 15 கோடி சம்பளம் கேட்டிருக்கிறார்.

சம்பள விஷயத்தில் சூர்யாவும் மற்றும் கார்த்தியும் மிகவும் புத்திசாலிகள். தெலுங்கு பக்கம் தங்கள் படம் நன்றாக ஓடும் என்பதால் அதற்கும் சேர்த்து சம்பளம் பேசுவார்கள். அல்லது தெலுங்கு ரைட்சை தனியாக வாங்கிக் கொண்டு அதை பலகோடிக்கு விற்று விடுவார்கள். இது தவிர சூர்யா படத்துக்கு 7 முதல் 10 கோடி வரை வாங்குகிறார். கார்த்தி 5 முதல் 7 கோடி வாங்குகிறார்.

விளம்பர வருமானங்கள் தனி. ஆகவே,  இப்போது சினிமாவில் அதிகம் சம்பாதிப்பது சிவகுமார் பேமிலிதான்.

சூர்யாவைப் போலவே தெலுங்கு ரைட்சையும் சேர்த்து வாங்கும் நடிகர் விஷால். 3 முதல் 5 கோடி சம்பளம் வாங்கும் விஷால் கூடவே தெலுங்கு ரைட்சை வாங்கி அதனையும் 3 கோடி வரைக்கும் விற்றுக் கொள்வார். ஆர்யாவின் சம்பளம் விஷால் அளவுதான். ஆனால் தெலுங்கு ரைட்ஸ் கேட்பதில்லை. "சேட்டை" படத்துக்கு நாலரை கோடி சம்பளமாக பெற்றுள்ளார்.

விக்ரம் 10 கோடியை தாண்டித்தான் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார். சமீபத்திய அவரது படங்கள் சரியாக போகாததால் கொஞ்சம் குறைத்துக் கொள்ள முன்வந்திருக்கிறார். இருந்தாலும் ஷங்கரின் "ஐ" படத்துக்கு அவர் பெற்றுள்ள சம்பளம் 11 கோடி.

சிம்புவின் சம்பளம் 5 முதல் 7 கோடி. தனுஷின் சம்பளமும் சிம்பு அளவுதான். ஆனால் தனுஷிடம் ஒரு நல்ல பழக்கம், நல்ல படம் நல்ல கதை என்றால் சம்பளத்தை பெரிதாக கருத மாட்டார். "மரியான்" படத்தில் குறைந்த சம்பளம் பெற்றே நடித்து வருகிறார். ஜீவாவின் சம்பளம் 5 கோடிக்கு உள்தான். சமீபத்திய படங்களின் தோல்வியால் 3 கோடிக்கு இறங்கி வந்திருக்கிறார். ஜெயம்ரவியின் சம்பளம் 3 முதல் 5 கோடி.

காமெடியன்களில் அதிகம் சம்பளம் வாங்குவது இன்றைய நிலவரப்படி சந்தானம். ஒரு நாளைக்கு 5 முதல் 7 லட்சம். அதற்கு அடுத்த இடத்தில் இருப்பவர் சத்தியமா நம்புங்க பவர் ஸ்டார். ஒரு நாளைக்கு 3 முதல் 5 லட்சம் வாங்குகிறார். வடிவேலு முன்பு தினசரி சம்பளம் வாங்கினார். இப்போது ஒரு படத்துக்கு இத்தனை கோடி கொடுத்து விடுங்கள் என்கிறாராம்.

குணசித்திர நடிகர்களில் அதிக சம்பளம் வாங்குகிறவர் பிரகாஷ்ராஜ். காட்சிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப 50 லட்சத்திலிருந்து ஒரு கோடி வரை பெற்றுக் கொள்வார்.

நடிகைகளில் அனுஷ்கா நயன்தாரா டாப்

நடிகைகளில் கோடியை தாண்டி சம்பளம் பெறுகிறவர்கள் நயன்தாரா, அனுஷ்கா, இலியானா ஆகியோர். இப்போது இந்த பட்டியலில் அமலாபாலும், காஜல் அகர்வாலும், சமந்தாவும், ஸ்ருதியும் இணைந்திருக்கிறார்கள். த்ரிஷா எப்போதும் ஒரே மாதிரியாக சம்பளம் பெறுவார். தமிழ் என்றால் 60 லட்சமும், தெலுங்கு என்றால் 75 லட்சமும் பெற்றுக் கொள்வார். அஞ்சலி 50 லட்சம் வரை சம்பளம் வாங்குகிறார்.

Login

Register

*
*
*
*
*

* Field is required