HIGHLIGHTS
A+ R A-

நடிகை சுகுமாரி காலமானார் !!!

E-mail Print PDF
சில நாட்களுக்கு முன், அவர் வீட்டில் விளக்கு ஏற்றும் போது,  உடலில் பலத்த தீ காயம் ஏற்பட்டது. இதையடுத்து, பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், 35 சதவீத தீக்காயம் ஏற்பட்டதாகத் தெரிவித்தனர்.  இதையடுத்து, தீவிர சிகிச்சை பிரிவில், சுகுமாரிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தகவல் அறிந்து, முதல்வர் ஜெயலலிதா, மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தார்.

இந்நிலையில், இன்று (26.03.2013) மாலை, 5:30 மணிக்கு, நடிகை சுகுமாரி, சிகிச்சைப் பலனின்றி மரணடைந்தார். இதையடுத்து, அவர் உடல், தி.நகர் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. திரையுலகைச் சேர்ந்த  நடிகர், நடிகைகள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.  இறுதி சடங்கு, நாளை மாலை, 4:00 மணிக்கு நடக்கிறது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா அனுப்பியுள்ள இரங்கல் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: எளிமையானவரும், பழகுவதற்கு இனிமையானவருமான சுகுமாரியின் மறைவு, திரைப்படத் துறையினருக்கும், கலை துறையினருக்கும் ஏற்பட்டுள்ள பேரிழப்பாகும். இவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு, என் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற, எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். இவ்வாறு,  முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

Login

Register

*
*
*
*
*

* Field is required