HIGHLIGHTS
A+ R A-

தலை அஜித்துக்கு வலது காலில் அறுவை சிகிச்சை

E-mail Print PDF

அஜீத்-நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'வலை'.

இந்தப் படத்தை விஷ்ணுவர்த்தன் இயக்கி வருகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ஏ.எம்.ரத்னம் தயாரிக்கிறார். அண்மையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடந்த போது வில்லன்களுடன் மோதுகிற ஒரு சண்டை காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. இந்த சண்டை காட்சியில் அஜீத் ஒரு காரில் இருந்து இன்னொரு கார் மீது தாவுவது போன்ற காட்சியில், ‘டூப்’ போடாமல் நடித்தார். அப்போது அவருடைய வலது காலில் பலத்த அடிபட்டது. இதற்காக சிகிச்சை எடுத்துக் கொண்ட அஜீத் தொடர்ந்து படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வந்தார். இருப்பினும் அவருக்கு காலில் ஏற்பட்ட வலி குறைந்தபாடு இல்லை.

அறுவை சிகிச்சை செய்து கொண்டால் படப்பிடிப்பு பாதிப்படையும் என்பதை உணர்ந்த அஜீத் ஒப்பந்தமான இரண்டு படங்களையும் நடித்த முடித்த பிறகு அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்திருக்கிறார்.

இந்த அறுவை சிகிச்சை அக்டோபர் 21ம் தேதி வெளிநாட்டில் நடக்கிறது. அறுவை சிகிச்சைக்கு பின்பு தொடர்ந்து 5 மாதங்கள் ஓய்வெடுக்க இருக்கிறார். இதனால் புதிய பட வாய்ப்புகள் எதையும் அவர் ஏற்றுக் கொள்ளவில்லை.

Login

Register

*
*
*
*
*

* Field is required