HIGHLIGHTS
A+ R A-

3 ஜீனியஸ் Featured

Rate this item
(0 votes)
அணுசக்தியை எதிர்த்து உலகமே போராடி வரும் நிலையில், அதன் நன்மைகளை விளக்கும் வகையில் உருவாகிறது ஒரு தமிழ்ப் படம். '3 ஜீனியஸ்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படம் மலேசியாவில் உருவாகும் தமிழ்ப் படமாகும்.

ஆன்ட்ராக் அனிமேஷன் மற்றும் பிலிம் கம்பைன் தயாரிக்கும் இப்படம் மக்களின் விழிப்புணர்வுக்கு விஞ்ஞானம் ஒரு மகத்தான பங்கு வகிக்கிறது. அணு சக்தியால் ஏற்படும் நன்மைகள் நானோ தொழில் நுட்பம் போன்ற அறிவிய ல்விழிப்புணர்வை வலியுறுத்தி உருவாக்கப்படுகிறது. அதி புத்திசாலிகளாகப் பிறக்கும் மூன்று குழந்தைகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்டதுதான் 3 ஜீனியஸ் படத்தின் கதை.

இப்படத்தில் மலேசிய முன்னணி நடிகர்கள் லண்டன் டான் பிரசன்னா, சசி அபாஸ், அகோதரன், சங்கீதா, கவிதா, ஜஸ்பீர், ஆனந்தராஜ் ஆகியோர் நடிக்க, இவர்களுடன் இயக்குநரும் நடிகருமான கே.பாக்யராஜ், முக்கிய கதாபாத்திரமான விஞ்ஞானி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தில் வில்லனாக நடிப்பதற்காக நான்கு நாடுகளில் இருந்து நான்கு பேர் அழைத்து வரப்பட்டிருக்கிறார்கள். பாகிஸ்தானிலிருந்து யாசின், சிங்கப்பூரிலிருந்து ஆனந்த்ராஜ், நைஜீரியாவில் இருந்து கிரிஷ், அரேபியாவிலிருந்து அலிபாப் ஆகியோர் தான் அந்த நான்கு வில்லன்கள்.

இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுது இயக்குகிறார் ராஜ். மகேஷ் தேவ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஆதிஷ் உத்ரியன் இசையமைக்கிறார்.

புண்ணியமூர்த்தி கணேசன், சிவா கணேசன், விஜேந்திரன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் உள்ள ஐந்து பாடல்களும் மலேசியா மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் படமாக்கப்பட்டுள்ளது.

Login

Register

*
*
*
*
*

* Field is required