HIGHLIGHTS
A+ R A-

Makkal Osai

திருமணத்திற்கு ரெடியான ஆர்யா

E-mail Print PDF
நயன்தாரா-பிரபுதேவா காதல் முறிவுக்குப் பிறகு நயன் தாரா, ஆர்யாவுடன் காதல் கொண்டிருப்பதாக் கிசுகிசுக்கள் அவ்வபோது வெளியாகிறது. இதை ஆர்யாவும், நயன் தாராவும் மறுத்தாலும், அவர்கள் பாஸ் என்கிற பாஸ்கரன் படத்திற்குப் பிறகு வலை, ராஜா ராணி உள்ளிட்டப் படங்களில் இணைந்து நடிக்கின்றனர்.

இந்த நிலையில் சமீபத்தில், நயன் தாராவுக்கு தனது வீட்டில் ஆர்யா பிரியாணி விருந்து வைத்திருக்கிறார். நயன் தாராவுக்க காதல் எந்த அளவுக்குப் பிடிக்குமோ அதை விட மூன்று மடங்கு பிரியாணியைப் பிடிக்குமாம். இந்த பிரியாணி விருந்து கூட இவர்களுடைய காதல் கிசுகிசுவை பரப்பியது.

இந்த நிலையில், பிரியாணி விருந்தை நயன் தாராவுக்கு மட்டும் வைக்கவில்லை. எனது அம்மா ருசியான பிரியாணி சமைப்பார். அதை சாப்பிட்டு விட்டு சிலர் வெளியே சொல்கிறார்கள். அதனால் பலர் பிரியாணி சாப்பிட ஆர்வமாக இருப்பதை நான் அறிந்தேன். அதனால் தான் இந்த பிரியாணி விருந்துக்கு ஏற்பாடு செய்தேன். இது நயன் தாராவுக்கு மட்டும் அல்ல, இதில் பல நடிகர், நடிகைகள், இயக்குநர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டார்கள் என்று பிரியாணி விருந்துக்கு ஆர்யா விளக்கம் அளித்துள்ளார்.

தற்போது ஆர்யா திருமணத்திற்கு தயராகிவிட்டாராம். அவருடைய குடும்பத்தார் அவருக்கு பரபரப்பாக பெண் தேடிக்கொண்டிருக்கிறார்களாம். பொருத்தமான பெண் கிடைத்தவுடன் திருமணம் தானாம்.
Last Updated on Friday, 05 April 2013 03:37

வாய்ப்பை விட்டுகொடுத்த தேவா

E-mail Print PDF
'வான்மதி', 'காதல் கோட்டை', 'காலமெல்லாம் காதல் வாழ்க', 'வெற்றிக் கொடிகட்டு' உள்ளிட்ட 11 திரைப்படங்களை தயாரித்திருக்கும் சிவசக்தி பாண்டியன், தனது எஸ்.எஸ்.மூவி மேக்கர்ஸ் நிறுவனம் மூலம் 12வதாக தயாரித்துள்ள படம் 'அர்ஜூனன் காதலி'.

ஜெய் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் ஹீரோயினாக பூர்ணா நடித்துள்ளார் பார்த்தி பாஸ்கர் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கிறார். சிவசக்தி பாண்டியன் தயாரித்த 11 படங்களுக்கும் இசையமைத்த தேவா, 'அர்ஜூனன் காதலி' படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பை தனது மகனும், பிரபல இசையமைப்பாளருமான ஸ்ரீகாந்த் தேவாவுக்கு விட்டுக்கொடுத்திருக்கிறார்.

இப்படத்தின் இசை வெளியீடு சமீபத்தில் நடைபெற்றது. எளிமையாக நடைபெற்ற இந்த விழாவில் அர்ஜூனன் காதலி படக்குவினர் அனைவரும் கலந்துகொள்ள, இசையமைப்பாளர் தேவா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பாடல்கள் குறுந்தகடை வெளியிட்டார். (டி.என்.எஸ்)
Last Updated on Friday, 05 April 2013 03:07

நானி நானி நானி ....

E-mail Print PDF
"கும்கிக்கு அடுத்ததாக, வளைகுடா வாழ் தமிழர்களை மையமாக வைத்து, ஒரு படத்தை எடுக்க திட்டமிட்டுள்ளார், பிரபு சாலமன். இந்த படத்தில், கவுதம் கார்த்திக் தான், ஹீரோவாக நடிக்கப் போவதாக கூறப்பட்டது. இதுதொடர்பாக, கவுதமும், பிரபு சாலமனும், பேசியதாகவும், செய்திகள் வெளியாகின.ஆனால், அந்த படத்திலிருந்து, கவுதமை, பிரபு சாலமன் கழற்றி விட்டதாகவும், தகவல்கள் வெளியாகின. இப்போது, இந்த படத்தில், நான்ஈ படத்தில் நடித்த, நானி, ஹீரோவாக நடிக்கப் போவதாக, கோடம்பாக்கத்தில் பேச்சு அடிபடுகிறது. தன் படத்தில் நடிக்கும் ஹீரோ, தமிழ், தெலுங்கு, என, இரு மொழி ரசிகர்களுக்கும், நன்றாக அறிமுகமானவராக இருக்க வேண்டும் என்பதால், நானியை தேர்வு செய்துள்ளாராம், பிரபு சாலமன்.  தன், முந்தைய படங்களில், கேரளாவைச் சேர்ந்த, அமலா பால், லட்சுமி மேனன் ஆகியோரை நடிக்க வைத்த, பிரபு சாலமன், இந்த படத்திலும், கேரளாவைச் சேர்ந்த, ஒரு புதுமுகத்தை தான், அறிமுகப்படுத்தப் போகிறாராம்.
Last Updated on Thursday, 04 April 2013 06:32

ஜெய்க்கு அடித்தது லாட்டரி !!

E-mail Print PDF
இப்போது, "திருமணம் எனும் நிக்காஹ் என்ற படத்தில் கமிட்டாகியுள்ளார். சில கதைகள் சிரிக்க வைக்கும், சில கதைகள் சிந்திக்க வைக்கும். ஆனால், அந்த இரண்டு அம்சங்களும் உள்ள படம் இது என்று சொல்லும் ஜெய், இப்படம் என்னை அடுத்த தளத்துக்கு எடுத்துச் செல்லும் கதை என்பதால், இதில் நடிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் என்கிறார். மேலும், இதுவரை சிங்கிள் ஹீரோயின்களுடன் மட்டுமே, டூயட் பாடிய எனக்கு, இப்படத்தில் இரண்டு ஜோடி. அதில் ஒருவர் தனுஷ் நடிக்கும், "நையாண்டியில் நடித்து வரும் நஸ்ரியா நஸிம் என்கிறார் ஜெய்.
Last Updated on Tuesday, 26 March 2013 07:58

ஆண்ட்ரியாவின் அலர்ஜி

E-mail Print PDF
"பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் அறிமுகமான ஆண்ட்ரியா, அதன் பின், "ஆயிரத்தில் ஒருவன், விஸ்வரூபம் படங்களில் நடித்து தனக்கென, ஒரு இடத்தை பிடித்துவிட்டார். அதோடு, பின்னணி பாடுவதிலும் பிசியாக இருக்கிறார். இருப்பினும், இசையமைப்பாளர் அனிருத்துடன், முத்தம் கொடுப்பது போல், புகைப்படங்கள் வெளியானதில் இருந்து, ஆண்ட்ரியா பாடும் பாடல்களில், "இலைமறை காய் மறையாக ஆபாச வார்த்தைகளையும் கோர்த்து விடுகிறார்களாம். அதனால், சமீபகாலமாக, யார் தன்னை பாட அழைத்தாலும், பாடலை ஒரு முறை படித்து பார்த்து விட்டே பாட சம்மதிக்கிறார்  ஆண்ட்ரியா. அது மட்டுமின்றி, "இனி எத்தனை பெரிய ஹீரோக்களின் படமென்றாலும்,  லிமிட்டான கிளாமரை மட்டுமே  வெளிப்படுத்துவேன் என்ற புதிய கொள்கையையும் கடைபிடித்து வருகிறார் ஆண்ட்ரியா.
Last Updated on Tuesday, 26 March 2013 08:04

Page 1 of 4

Facebook Social Comments

Share on Myspace

Login

Register

*
*
*
*
*

* Field is required