HIGHLIGHTS
A+ R A-
News

திருவனந்தபுரம்: ""சவுதி அரேபிய அரசின், புதிய சட்டத்தால், அங்கு பணியாற்றும் இந்திய தொழிலாளர்கள், வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வேலை இழந்தவர்கள், கேரளாவுக்கு திரும்ப விரும்பினால், அவர்களுக்கான விமான பயண கட்டணத்தை, மத்திய அரசே, செலுத்த முன்வந்துள்ளது,'' என, கேரள முதல்வர், உம்மன் சாண்டி கூறினார்.

 

புதிய சட்டம்: கேரள முதல்வரும், காங்., மூத்த தலைவர்களில் ஒருவருமான, உம்மன் சாண்டி கூறியதாவது: சவுதி அரேபிய அரசு, புதிய தொழிலாளர் சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இதன்படி, அங்குள்ள நிறுவனங்கள், வேலை வாய்ப்புகளில், 10 சதவீதத்தை, அந்த நாட்டை சேர்ந்தவர்களுக்கே ஒதுக்க வேண்டும்.


அபாயம்: சவுதி அரேபிய அரசின், இந்த புதிய சட்டத்தால், அங்கு பணிபுரியும் ஏராளமான இந்தியர்கள், வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வேலை இழக்கும் இந்திய தொழிலாளர்கள், இந்தியா திரும்புவதில், பல்வேறு பிரச்னைகள் உள்ளன. கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் தான், சவுதி அரேபியாவில், அதிக அளவில் பணிபுரிகின்றனர்.


இதுகுறித்து, வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரங்களுக்கான, மத்திய அமைச்சர், வயலார் ரவியிடம், ஆலோசித்தோம். இதையடுத்து, வேலை இழக்கும் தொழிலாளர்கள், கேரளா திரும்ப விரும்பினால், அவர்களுக்கான விமான பயண கட்டணத்தை, மத்திய அரசே ஏற்கும் என, அவர் தெரிவித்து உள்ளார்.


உதவி மையம்: இந்த விவகாரம் குறித்து, கேரள அமைச்சக கூட்டத்திலும் விவாதிக்கப்பட்டது. கேரளாவைச் சேர்ந்தவர்கள், சவுதியில், வேலை இழந்து திரும்பினால், அவர்களுக்கான மறு வாழ்வு பணிகளை மேற்கொள்வது குறித்தும், அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இது தொடர்பாக, ஒவ்வொரு மாவட்ட, கலெக்டர் அலுவலகங்களிலும், உதவி மையங்கள் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு, உம்மன் சாண்டி கூறினார்.


இதற்கிடையே, புதிய தொழிலாளர் சட்டத்தால், இந்திய தொழிலாளர்களுக்கு ஏற்படும் பிரச்னை குறித்து பேசுவதற்காக, வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரங்களுக்கான அமைச்சர், வயலார் ரவி, விரைவில், சவுதி செல்லவுள்ளார். இப்பிரச்னை குறித்து, பிரதமர் மன்மோகன் சிங்குடனும், வெளியுறவு அமைச்சர், சல்மான் குர்ஷித்திடனும், வயலார் ரவி, ஏற்கனவே ஆலோசனை நடத்தியுள்ளார்.

Monday, 31 December 2012 04:32
Published in News
Written by
Read more... 0
இந்தூர்: இரண்டு வயது பெண் குழந்தை, படுக்கையில் சிறுநீர் கழித்ததால், ஆத்திரமடைந்த தந்தை, குழந்தையை தூக்கி வீசினார்; இதில், குழந்தைக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
Saturday, 29 December 2012 06:12
Published in News
Written by
Read more... 0

புதுடில்லி: இந்திய தொழில் வர்த்தக கூட்டத்தில் பங்கேற்று காங்., துணை தலைவர் ராகுல் பேசுகையில்; இந்தியா மிக வலிமையானது. இந்திய தொழில் நிறுவனங்கள் இந்திய வளர்ச்சிக்கு பெரும் துணையாக இருக்கின்றன. இந்திய வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது. தற்போது இந்தியா முன்னேற்ற பாதையில் சென்று கொண்டிருக்கிறது. நமது கல்வி பயிற்சியில் குறைபாடுகள் உள்ளன. இது இன்னும் உலகத்தரத்தில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும் என்றார்.

நாட்டில் மாற்றங்கள் வேண்டும். அரசு மட்டும் தானாக வளர்ச்சி கட்டமைப்பை கொண்டு வர முடியாது. இதற்கு தொழில் நிறுவனங்கள் உதவி தேவைப்படுகிறது. நாட்டில் அனைவரும் குறைந்த பட்ச தேவை மற்றும் தகுதிகளையும் பெற்று இருக்கும் வகையில் உருவாக்கப்பட வேண்டும். பயனற்ற கல்வி தொடர்பான விஷயங்களளை தூக்கி எறிய வேண்டும். இளைஞர்கள் இந்த பாதைக்கே தள்ளப்படுகின்றனர். கல்வியில் சீர்திருத்தம் கொண்டு வர தொழில் நிறுவனங்கள் துணை நிற்க வேண்டும்., பல்கலைகள் த‌ொழில் துறையுடன் இணைந்து செயலாற்ற வேண்டும். நமது நாட்டின் முன்னேற்றமும், ஒற்றுமையும் இணைந்து இருக்க வேண்டும். இளைஞர்கள் சக்தியை கொண்டு நாம் வளமான இந்தியாவை உருவாக்க முடியும். நமது அறிவு திறன் உரிய முறையில் பயன்படுத்தப்பட வேண்டும். நாட்டின் முடிவுகள் எடுக்கப்படுவதில் மக்களின் பங்கும் அவசியம் இருக்க வேண்டும். மத்திய, மாநில உறவுகள் அரசியல் ரீதியாக பிரிந்து கிடப்பது கவலை அளிக்கிறது.

 

காங்., அரசு வளர்ச்சியான இந்தியாவை உருவாக்க பாடு பட்டு வருகிறது. வளர்ச்சி பாதைக்கு பல்வேறு சவால்கள் உள்ளன. ஏழைகளை அடையாளம் காண்பதில் பெரும் சிரமம் உள்ளது. பசுமை புரட்சி, வெண்மை புரட்சி, தொழில் துறையில் புரட்சி தேவைப்படுகிறது. நாட்டில் வீட்டுக்கு வீடு போன் வந்திருப்பதே புரட்சி தான். இன்னும் நமது திறமைகள் வளர்க்கப்பட வேண்டும். இந்தியா தற்போது வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது. 21 ம் நூற்றாண்டை வளமானதாக்கிட துல்லியமான யோசனைகள் தேவைப்படுகிறது. இவ்வாறு பேசினார் .

Wednesday, 27 March 2013 05:46
Published in News
Written by
Read more... 0

சென்னை: ஊட்டச்சத்து பற்றாக்குறை அதிகமாக உள்ள அரியலூரில், பள்ளி குழந்தைகளுக்கு, லட்டு, அல்வா, கார வகைகள் வழங்கப்படும்' என, தமிழக அரசு அறிவித்துள்ளது.

சட்டசபையில், சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத் துறை மானியக் கோரிக்கையில், அமைச்சர் வளர்மதி வெளியிட்ட அறிவிப்பு:


* சேவை இல்லங்களில், விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் தங்கி பயனடைகின்றனர். அதிக பெண்கள் பயன் பெற, 1.38 கோடி ரூபாயில், பெரம்பலூர், கிருஷ்ணகிரியில் புதிதாக சேவை இல்லங்கள் துவக்கப்படும்.

* அங்கன்வாடி மையங்களில் உள்ள குழந்தைகளுக்கு, 2.72 கோடி ரூபாய் செலவில், "தன் சுத்தம் பேணும் சுகாதாரப் பை'கள் வழங்கப்படும்.

* 10 ஆயிரம் அங்கன்வாடி மையங்களில், 1.20 கோடி ரூபாய் செலவில், முன்பருவ கல்விக்கு, உட்புறச் சுவர்களில், விளக்கப் படத்துடன் நீதிக் கதைகள் அச்சிட்டு தரம் உயர்த்தப்படும்.

* சென்னை, தாம்பரம் சேவை இல்லத்தில், ஆசிரியர் பயிற்சி பயிலும் மாணவியருக்கு, 1 கோடி ரூபாய் செலவில், தங்கும் விடுதி கட்டப்படும்.

* குழந்தைத் திருமணத்தை தடுத்து, பெண் குழந்தைகளை பாதுகாக்கும் விழிப்புணர்வு பிரசார விளம்பரப் படங்கள் தயாரிக்கப்படும்.

* அங்கன்வாடி குழந்தைகளின் எடையை கண்காணிக்க, 50 லட்சம் ரூபாய் செலவில், 2,000 எடை கருவிகள் வழங்கப்படும்.

* ஊட்டச்சத்து பற்றாக்குறை சதவீதம் அதிகமாக உள்ள அரியலூரில், முன்னோடி திட்டமாக, ஐந்து மாதங்களுக்கு, 1.29 கோடி ரூபாய் செலவில், சிறு தானியங்களின் கலோரி மதிப்பு குறையாமல், குழந்தைகள் விரும்பும் வண்ணம், தினசரி, 50 கிராம் லட்டு, அல்வா, கார வகைகள் வழங்கப்படும்.

* அரசினர் குழந்தைகள் இல்லங்கள் மற்றும் சிறப்பு இல்லங்களில், சூரிய சக்தி உபகரண தெரு விளக்குகள், 35 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும்.

* பெரம்பலூரில், 370 சத்துணவு மையங்களில், ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு, 3.71 லட்சம் ரூபாய் செலவில், கூடுதலாக, தினசரி, 500 கலோரி ஊட்டச்சத்து கொண்ட உணவு பொருட்கள், 220 வேலை நாட்களில் வழங்கப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Wednesday, 27 March 2013 05:46
Published in News
Written by
Read more... 0
போபால்: மத்திய பிரதேசத்தில், கோவில் பூசாரி ஒருவர், ஒரு பெண்ணை கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்ததுடன், அந்த பெண்ணை, சமூக விரோத கும்பலிடம், 40 ஆயிரம் ரூபாய்க்கு, விற்பனை செய்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ம.பி., போலீசார் கூறியதாவது: சத்தர்ப்பூர் மாவட்டத்தை சேர்ந்த, 33 வயது பெண்ணுக்கு, 5 வயதில், ஒரு குழந்தை உள்ளது. இந்த பெண்ணையும், அவரது குழந்தையையும், இரண்டு மாதங்களாக காணவில்லை. நேற்று முன்தினம், திகாமா கார்க் மாவட்டத்தில், அந்த பெண்ணும், அவரது குழந்தையும், கண்டுபிடிக்கப்பட்டனர். அவரிடம் விசாரித்தபோது, பல அதிர்ச்சியான தகவல்கள் தெரியவந்தன.

அந்த பெண்ணை, பால பிரசாத் சுக்லா என்பவர், ஜனவரி மாதம், கடத்திச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இவரின் நண்பர்கள் சிலரும், அந்த பெண்ணை, பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பால பிரசாத் சுக்லா, ஒரு கோவிலில் பூசாரி.பாலியல் பலாத்காரம் செய்த பின், சமூக விரோத கும்பலை சேர்ந்தவர்களிடம், 40 ஆயிரம் ரூபாய்க்கு, அந்த பெண்ணை, விற்பனை செய்துள்ளனர். இதன்பின், அந்த சமூக விரோத கும்பலில் இருந்தவர்களும், அந்த பெண்ணை, பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
இதற்கிடையே, அந்த பெண், மறைத்து வைக்கப்பட்டிருக்கும் இடத்தை, அவரது உறவினர் ஒருவர் கண்டுபிடித்து, போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து, அந்த பெண்ணும், அவரது குழந்தையும் மீட்கப்பட்டனர். அவரை கடத்திய, பூசாரியையும், பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட, மற்றவர்களையும், தேடி வருகிறோம். இவ்வாறு போலீசார் கூறினர்.
Saturday, 29 December 2012 05:42
Published in News
Written by
Read more... 0

எஸ்.எஃப்.ஐ . மாணவர் சுதிப்தா குப்தாவின் மரணத்தை அடுத்து, ஆச்சரியப்படும் விதமாக எஸ்.எஸ்.கே.எம். மருத்துவமனைக்கு திடீரென வந்து பார்வையிட்ட மாநில முதல்வர் மமதா பானர்ஜி, செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், சுதிப்தாவின் குடும்பத்துக்கு அரசினால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்வதாகக் கூறினார். மேலும், சுதிப்தா தனது தந்தை, சகோதரியுடன் வசித்து வந்ததாக அறிகிறேன். சுதிப்தாவை இழந்து வாடும் அவரது தந்தை விரும்பினால் தகுந்த இழப்பீட்டை வழங்க அரசு தயாராக உள்ளது என்று கூறினார்.

அவரது இந்தப் பேச்சு, சுதிப்தாவின் தந்தை பிரணாப் குமார் குப்தாவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. 63 வயதாகும் அவர், மம்தாவின் பேச்சை நிராகரித்ததுடன், தனக்கு நீதி கிடைக்கும் வரை போராடப் போவதாகவும் கூறினார்.

என்னை பணத்தைக் காட்டி மடக்கிவிடலாம் என்று நினைக்காதீர்கள். நான் ஒன்றும் பிச்சைக்காரன் அல்ல. என் மகனின் வாழ்க்கைக்கு நிகரான எதையும் நான் பெற்றுவிட மாட்டேன் என்று செய்தியாளர்களிடம் கூறினார் அவர்.

எனது மகன் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். இதுதான் நீதியா? நான் மத்திய அரசுப் பணியாளனாக இருந்தவன். எனக்கு ஓய்வூதியம் வருகிறது. நான் பணம் எதையும் பெறப்போவதில்லை. இது எனது கொள்கைக்கு எதிரானது. அவரால் பணத்தைத் தரமுடியும்.. ஆனால் என் மகனைத் திருப்பித் தரமுடியுமா? என்று கேள்வி எழுப்பினார் பிரணாப் குமார். நான் நீதியை எதிர்பார்க்கிறேன். எனது மகனை அடித்துக் கொன்ற காவல் அதிகாரியைக் கைது செய்து, தண்டனை வழங்க வேண்டும் என்றும் கூறினார் அவர்.

 

 

Saturday, 29 December 2012 05:41
Published in News
Written by
Read more... 0

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே தந்தை, மகள் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

கல்லிடைக்குறிச்சி அருகே திம்மராஜபுரத்தைச் சேர்ந்த முத்தையா (80) மற்றும் அவரது மகள் லட்சுமி (41) ஆகியோர் இன்று அப்பகுதியில் உள்ள வயல் வெளியில் வெட்டுக்காயங்களுடன் பிணமாக கிடந்தனர்.

இது குறித்து கள்ளிடைக்குறிச்சி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

லட்சுமி தனது கணவரை பிரிந்து தந்தையுடன் வசித்து வந்த நிலையில், இருவரும் படுகொலை செய்யப்பட்டிருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Saturday, 29 December 2012 05:39
Published in News
Written by
Read more... 0

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்ததை அடுத்து பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் புதன்கிழமை முதல் நடைமுறைக்கு வந்தது.

புது தில்லி மாணவி பாலியல் பலாத்கார சம்பவத்தை அடுத்து பாலியல் குற்றங்களுக்கு எதிராக கடும் சட்டம் இயற்ற வேண்டும் என பல்வேறு தரப்பினர் போராட்டங்கள் மேற்கொண்டனர்.

மத்திய அரசும் நீதிபதி வர்மா குழுவை அமைத்தது. இதற்கிடையே பெண்கள் வன்கொடுமை தடுப்பு மசோதா கடந்த மார்ச் மாதம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது.

இச்சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி செவ்வாய்க்கிழமை ஒப்புதல் வழங்கினார். இதையடுத்து இச்சட்டம் புதன்கிழமை முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு ஆயுள் தண்டனை மற்றும் அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கவும் இச்சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது.

இச்சட்டத்தின்கீழ் பெண்களை தொடர்ந்து சென்று துன்புறுத்துதல், ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்துதல் போன்றவை ஜாமீனில் வெளிவரமுடியாத பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளன.

மேலும் பெண்கள் மீது அமிலம் வீசுவோருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கவும் வகை செய்யப்பட்டுள்ளது. பாலியல் ரீதியாகவோ அல்லது அமில வீச்சிலோ பாதிக்கப்படும் பெண்களுக்கு அனைத்து மருத்துவமனைகளும் உடனடி சிகிச்சை தரவேண்டும். மறுத்தால் தண்டனை தரவும் இச்சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

காவல்துறை அல்லது ராணுவத்தினர் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டால் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கவும் இயலும்.

Saturday, 29 December 2012 05:36
Published in News
Written by
Read more... 0

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் இந்திய மாணவர் கூட்டமைப்பு தலைவர் இறந்தது தொடர்பாக, பஸ் ஒட்டுநரை போலீஸார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை வைத்துள்ளது.

இதுகுறித்து காவல் துறையினர் கூறியது:

மேற்குவங்க மாநிலத்தில் கல்லூரி தேர்தலை ஒத்தி வைத்துள்ள அரசின் நடவடிக்கையைக் கண்டித்து, ராணி ரஸ்மோனி சாலையில் இந்திய மாணவர் கூட்டமைப்பினர் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து, அவர்களை பஸ்ஸில் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

அப்போது, மாணவர் கூட்டமைப்பு நிர்வாகி சுதிப்தா குப்தா (22) ஓடும் பஸ்ஸிலிருந்து தவறி விழுந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் இறந்தார்.

இது தொடர்பாக பஸ் ஓட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

இதற்கிடையே, குப்தா இறந்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தெற்கு கொல்கத்தாவின் சில பகுதிகளில் வியாழக்கிழமை 12 மணி நேர பந்த்துக்கு மாணவர் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

நீதி விசாரணை தேவை: குப்தா, பஸ்ஸிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீதாராம் யெச்சூரி கூறுகையில், ""போலீஸாரின் அனுமதி பெற்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது தடியடி நடத்தி உள்ளனர். இது ஏற்றுக் கொள்ள முடியாதது. மேலும், போலீஸாரின் தடியடி காரணமாகவே குப்தா உயிரிழந்துள்ளார்.

எனவே, இதுகுறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்'' என்றார். மேற்குவங்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களும் நீதி விசாரணை வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

எதிர்பாராதது: உயிரிழந்த மாணவர் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்குச் சென்ற மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மாணவரின் குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளை செய்வதாக உறுதி அளித்தார்.

மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில், இந்த சம்பவம் எதிர்பாராதது என்றார். இதுகுறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கை குறித்த கேள்விக்கு அவர் பதில் அளிக்க மறுத்து விட்டார்.

உதவி வேண்டாம்: தனது குடும்பத்துக்கு உதவி அளிப்பதாக முதல்வர் கூறியிருப்பதை ஏற்க முடியாது என உயிரிழந்த குப்தாவின் தந்தை பிரனோப் குமார் கூறியுள்ளார். நான் மத்திய அரசு ஊழியராக இருந்து ஓய்வு பெற்றவன்.

எனக்கு ஓய்வூதியம் கிடைக்கிறது. எனவே, மாநில அரசின் உதவியைப் பெறுவது எனது கொள்கைக்கு எதிரானது. எனது மகன் போலீஸாரால் அடித்து கொல்லப்பட்டுள்ளார். இதற்கு நீதி கிடைக்கும் வரை போராடுவேன் என்று பிரனோப் குமார் தெரிவித்தார்.

Saturday, 29 December 2012 05:34
Published in News
Written by
Read more... 0

பிகாரில் வங்கியில் இருந்து பணம் எடுத்துச் சென்ற வேனில் இருந்த ரூ.1.20 கோடியை மர்ம நபர்கள் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்தனர்.

சரண் மாவட்டம் ஹன்ஸ்ராஜ்பூர் பகுதியில் புதன்கிழமை இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இது குறித்த விவரம்: தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் ரூ.1.20 கோடி ரொக்கம் மற்றொரு கிளைக்கு வேனில் எடுத்துச் செல்லப்பட்டது. இரு பாதுகாவலர்களும் வேனில் இருந்தனர். ஆள் நடமாட்டம் குறைந்த தேசிய நெடுஞ்சாலையில் வேன் சென்று கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிள்களில் வந்த 12-க்கும் மேற்பட்ட கொள்ளையர்கள் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி வேனை தடுத்து நிறுத்தினர். வேனில் இருந்த பாதுகாவலர்களை சுட்டு காயப்படுத்திய அவர்கள், பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றனர்.

Saturday, 29 December 2012 05:29
Published in News
Written by
Read more... 0
Share on Myspace

Recommended Articles

Prev Next

பள்ளி குழந்தைகளுக்கு இனிப்பு

பள்ளி குழந்தைகளுக்கு இனிப்பு

சென்னை: ஊட்டச்சத்து பற்றாக்குறை அதிகமாக உள்ள அரியலூரில்...

யாராலும் தடுக்க முடியாது

யாராலும் தடுக்க முடியாது

புதுடில்லி: இந்திய தொழில் வர்த்தக கூட்டத்தில் பங்கேற்று...

இலவச விமான சேவை

இலவச விமான சேவை

திருவனந்தபுரம்: ""சவுதி அரேபிய அரசின், புதிய சட்டத்தா...

சிறார் கொடுமை

சிறார் கொடுமை

இந்தூர்: இரண்டு வயது பெண் குழந்தை, படுக்கையில் சிறுநீர்...

பூசாரியின் பூஜை !

பூசாரியின் பூஜை !

போபால்: மத்திய பிரதேசத்தில், கோவில் பூசாரி ஒருவர், ஒரு ...

மகனை திருப்பித் தாருங்கள் !

மகனை திருப்பித் தாருங்கள் !

எஸ்.எஃப்.ஐ . மாணவர் சுதிப்தா குப்தாவின் மரணத்தை அடுத்...

தந்தை, மகள் வெட்டிப் படுகொலை !

தந்தை, மகள் வெட்டிப் படுகொலை !

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே தந்தை, மகள் வெட...

பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்ட…

பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம்

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்ததை அடு...

மாணவர் கூட்டமைப்பு தலைவர் சாவு

மாணவர் கூட்டமைப்பு தலைவர் சாவு

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் இந்திய மாணவர் கூட்டமைப...

ரூ.1.20 கோடி கொள்ளை

ரூ.1.20 கோடி கொள்ளை

பிகாரில் வங்கியில் இருந்து பணம் எடுத்துச் சென்ற வேனில் ...

3 பெண்கள் உள்பட 5 பேர் தீக்குளிப…

குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் ப...

சட்டத்துக்கு விரோத 6 என்கவுண்டர்…

சட்டத்துக்கு விரோத 6 என்கவுண்டர்கள்

மணிப்பூரில் நடந்த என்கவுண்டர்களில் 6 வழக்குகள் சட்டத்து...

கத்தியை காட்டி மிரட்டி திருடு

சிதம்பரம் முத்தையாநகரில் வசிக்கும் மருத்துவக்கல்லூரி மா...

தாயைக் கொன்ற மகன் கைது

தாயைக் கொன்ற மகன் கைது

சொத்து தகராறு விவகாரத்தில் தாயைக் கொலை செய்த மகன் கைது ...

மது மயக்கத்தில் சாலையில் படுத்த …

மது மயக்கத்தில் சாலையில் படுத்த பெண்மணி

ஆண்டிபட்டி-வைகை சாலையில் ஐம்பது வயது மதிக்கத்தக்க பெண்ம...

மதுரையில் துணை நகரம்

மதுரையில் துணை நகரம்

மதுரையில் ஒருங்கிணைந்த துணைக்கோள் நகரம் அமைக்கப்படும் எ...

மருத்துவ உதவி ரயில்

மருத்துவ உதவி ரயில்

சென்னை: சென்னை ஐ.சி.எப்.,பில் தயாரிக்கப்பட்ட, ரயில் விப...

கௌரவக் கொலை !!

கௌரவக் கொலை !!

இது ஒரு சாதி வெறிப் பிடித்த தகப்பனின் கேவலம்...ராஜஸ்தான...

4 மாணவர்கள் தற்கொலை முயற்சி

4 மாணவர்கள் தற்கொலை முயற்சி

விழுப்புரம்: தமிழக அரசின் இலவச மடிக்கணினி கேட்டு போராட்...

வெட்டி தப்பிய‌ திவாகரன்

தலைமறைவாக இருந்த திவாகரனை பிடிக்க சென்ற போலீசாரை அரிவா...

Rebekah Brooks formally charged …

Rebekah Brooks formally charged in UK eavesdropping scandal

The former head of media baron Rupert Murdoch's News In...

Inventor of Web hopes Olympics c…

Inventor of Web hopes Olympics can lead to 'beautiful' understanding

The founder of the World Wide Web may not be the world'...

Judge in Spain takes statements …

Judge in Spain takes statements from terror suspects

Madrid, Spain -- A judge at the Spanish National Court ...

Putin asks for court to show len…

Russian President Vladimir Putin is asking a court to s...

British court convicts parents i…

British court convicts parents in 'honor' murder

London (CNN) -- The parents of a 17-year-old girl will ...

Spain 'al Qaeda cell' may have p…

Spain 'al Qaeda cell' may have planned strike to coincide with Olympics

(CNN) -- Three suspected al Qaeda terrorists arrested l...

Germany's high court expands gay…

Germany's high court expands gay rights

Berlin -- Germany's constitutional court has strengthen...

Korea to investigate StanChart a…

Korea to investigate StanChart and HSBC

(Financial Times) -- South Korean financial regulators ...

Manchester United IPO prices bel…

Manchester United IPO prices below range

New York (Financial Times) -- Shares in Manchester Unit...

Russian authorities find sect me…

Russian authorities find sect members living underground

Dozens of children and adults belonging to an Islamist ...

Login

Register

*
*
*
*
*

* Field is required