HIGHLIGHTS
A+ R A-
News
வெலிங்டன்: நியூசிலாந்து அணியின் சர்ச்சைக்குரிய வீரர் ஜெசி ரைடர், 28. கிறைஸ்ட்சர்ச்சில் உள்ள "பாரில்', குடித்துவிட்டு வெளியே வந்த இவரை, மர்ம நபர்கள் சிலர் தாக்கினர். இதில், தலை, நுரையீரல் பகுதியில் காயமடைந்த இவர், "கோமா' நிலைக்கு தள்ளப்பட்டார்.

தற்போது "கோமா'வில் இருந்து மீண்டுள்ள ரைடர், சண்டை தொடர்பான சம்பவங்கள் எதுவுமே தன் நினைவில் இல்லை என்று தெரிவித்துள்ளார். கடைசியாக பங்கேற்ற போட்டியில் தான் "அவுட்டானது' நினைவில் உள்ளதாக என்று ரைடர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து போலீஸ் அதிகாரி பிரைன் ஆர்ச்சர் கூறுகையில்,"" தாக்குதல் சம்பவம் குறித்து ரைடரிடம் விசாரித்த போது, அந்த சம்பவம் அவர் நினைவில் இல்லை. விரைவில் நினைவுக்கு வரும் என நம்புகிறோம். அதுவரை அவரை கேள்வி கேட்டு தொந்தரவு செய்யவிரும்பவில்லை,'' என்றார்.

நியூசிலாந்து முன்னாள் பயிற்சியாளர் கிரகாம் ஹென்ரி கூறுகையில்,"" கிரிக்கெட் வீரர்களும் ரக்பி விளையாட்டு வீரர்களை பின்பற்ற வேண்டும். ஏன் என்றால் அவர்கள் எங்கு சென்றாலும் தனியாக செல்வது கிடையாது சக வீரர்களுடன் தான் செல்வார்கள்,'' என்றார்.

 

Friday, 28 September 2012 04:36
Published in News
Written by
Read more... 0

புதுடில்லி: ""ஐ.பி.எல்., அரங்கில் மீண்டும் ஒரு முறை கில்கிறிஸ்ட், டேரன் லேமன் கூட்டணி சாதிக்கும்,'' என, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் டேவிட் ஹசி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஆறாவது ஐ.பி.எல்., தொடர் நாட்டின் முக்கிய நகரங்களில் நடக்கிறது. இதில் இடம் பெற்றுள்ள கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, வரும் 7ம் தேதி புனேயில் நடக்கும் போட்டியில் புனே வாரியர்ஸ் அணியை சந்திக்கிறது. இம்முறை பஞ்சாப் அணியின் பயிற்சியாளராக ஆஸ்திரேலியாவின் டேரன் லேமன் நியமிக்கப்பட்டுள்ளார். கேப்டனாக ஆஸ்திரேலியாவின் கில்கிறிஸ்ட் நீடிக்கிறார். கடந்த 2009ல் தென் ஆப்ரிக்காவில் நடந்த 2வது ஐ.பி.எல்., தொடரில் டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் கேப்டனாக கில்கிறிஸ்ட், பயிற்சியாளராக டேரன் லேமன் இருந்தனர். இவர்களது கூட்டணி, டெக்கான் அணிக்கு முதன்முறையாக கோப்பை வென்று தந்தது. இதேபோல இம்முறை இவர்கள் பஞ்சாப் அணிக்கு முதல் முறையாக ஐ.பி.எல்., கோப்பை வென்று தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து பஞ்சாப் அணியின் டேவிட் ஹசி கூறியது: கடந்த 2009ல் டெக்கான் அணிக்காக கில்கிறிஸ்ட், லேமன் கூட்டணி சிறப்பாக செயல்பட்டு கோப்பை வென்று சாதித்தது. மீண்டும் இணைந்துள்ள இவர்கள், இம்முறை பஞ்சாப் அணிக்கு கோப்பை வென்று கைகொடுப்பார்கள் என நம்புகிறேன். இவர்களது வருகையால் அணி வீரர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இம்முறை பஞ்சாப் அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி சாதிக்க முயற்சிக்கும். கேப்டன் கில்கிறிஸ்ட் சிறந்த வீரர். இவர் பேட்டிங்கில் மட்டுமல்லாமல், விக்கெட் கீப்பராகவும் சாதிப்பார்.

முதல் போட்டியில் புனே அணியை அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்கிறோம். இப்போட்டி சவால் நிறைந்ததாக இருக்கும். இதுவரை நடந்த ஐந்து ஐ.பி.எல்., தொடரில், பஞ்சாப் அணி விளையாடிய முதல் போட்டியில் வெற்றி பெற்றதில்லை. இந்த மோசமான வரலாற்றை மாற்றி, இம்முறை தொடரை வெற்றியுடன் துவக்க போராடுவோம்.

பஞ்சாப் அணியில் அனுபவ வீரர்களுடன், திறமையான இளம் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். அணியில் இடம் பெற்றுள்ள வெளிநாட்டு வீரர்களும் நல்ல "பார்மில்' உள்ளனர். இத்தொடருக்கு சிறந்த முறையில் தயாராகி இருக்கிறோம்.

இவ்வாறு டேவிட் ஹசி கூறினார்.

Friday, 28 September 2012 04:36
Published in News
Written by
Read more... 0

கோலாலம்பூர்:உலக பாட்மின்டன் கூட்டமைப்பு (பி.டபிள்யு.எப்.,) சார்பில் வழங்கப்படும், சிறந்த வீராங்கனைக்கான விருதுக்கு இந்தியாவின் செய்னா நேவல் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.

சர்வதேச பாட்மின்டன் போட்டியில் சிறந்து விளங்கும் நட்சத்திரங்கள், உலக பாட்மின்டன் கூட்டமைப்பு (பி.டபிள்யு.எப்.,) சார்பில் ஆண்டுதோரும் விருது வழங்கி கவுரவிக்கப்படுவார்கள். கடந்த ஆண்டின் (2012) சிறந்த வீரர், வீராங்கனைக்கான விருதுக்கு முன்னணி நட்சத்திரங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

சிறந்த வீராங்கனைக்கான விருதுக்கு, உலகின் "நம்பர்-2' இடத்தில் உள்ள இந்தியாவின் செய்னா நேவல் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இவர், கடந்த ஆண்டு நடந்த இந்தோனேஷிய ஓபன், டென்மார்க் ஓபன் சூப்பர் சீரிஸ், தாய்லாந்து ஓபன் மற்றும் சுவிஸ் ஓபன் கிராண்ட் பிரிக்ஸ் கோல்டு உட்பட நான்கு முக்கிய தொடரில் சாம்பியன் பட்டம் வென்றார். தவிர இவர், லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்று புதிய வரலாறு படைத்தார்.

செய்னாவை தவிர, நான்கு சீன வீராங்கனைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு 8 தொடரில் சாம்பியன் பட்டம், லண்டன் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற சீனாவின் ஜுருய் லி, ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற சீனாவின் யிகான் வாங், ஒலிம்பிக் இரட்டையரில் தங்கம் வென்ற சீனாவின் டியன் குயிங், ஜாவோ யுன்லி ஆகியோர் இவ்விருதுக்கான போட்டியில் இடம் பெற்றுள்ளனர்.

சிறந்த வீரருக்கான விருதுக்கு சீனாவின் லின் டான், மலேசியாவின் லீ சோங் வேய் உள்ளிட்டோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

Friday, 28 September 2012 04:36
Published in News
Written by
Read more... 0

ஐதராபாத்: பாட்மின்டன் இரட்டையர் பிரிவு போட்டிகளில், இந்திய வீராங்கனை அஷ்வினி பொன்னப்பா, சகநாட்டைச் சேர்ந்த ஜுவாலா கட்டாவுடன் இணைந்து விளையாடப் போவதில்லை என்ற முடிவை எடுத்துள்ளார். புதிய ஜோடியாக இளம் இந்திய வீராங்கனை பிரத்னியா காத்ரேவுடன் விளையாட உள்ளார்.

சர்வதேச பாட்மின்டன் வரலாற்றில், பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்த ஜோடி ஜூவாலா கட்டா, அஷ்வினி பொன்னப்பா. இங்கிலாந்தில் 2011ல் நடந்த உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரில் ஜூவாலா, அஷ்வினி ஜோடி வெண்கலம் வென்றது. இதன்மூலம் இத்தொடரில் பதக்கம் வென்ற முதல் இந்திய ஜோடி என்ற வரலாறு படைத்தது. இந்த ஜோடி 2010ல், டில்லியில் நடந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் தங்கம் வென்றது.

கடந்த ஆண்டு நடந்த லண்டன் ஒலிம்பிக் போட்டியில் ஜூவாலா, அஷ்வினி ஜோடி பெரிய அளவில் சாதிக்கவில்லை. சிறிது காலம் ஓய்வு எடுக்க ஜுவாலா கட்டா முடிவு செய்தார். இதனையடுத்து அஷ்வினி, பிரத்னியா காத்ரேவுடன் இணைந்தார்.

ஜனவரி மாதம் மீண்டும் சர்வதேச போட்டியில் காலடி வைத்த ஜூவாலா, 2016ல் நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டியை கருத்தில் கொண்டு, அஷ்வினியுடன் இணைந்து போட்டியில் பங்கேற்க விரும்பினார். இவரை அஷ்வினி புறக்கணித்தார். சமீபத்தில் முடிந்த "ஆல் இங்கிலாந்து ஓபன்' பாட்மின்டன் தொடரில் அஷ்வினி, பிரத்னியாவுடன் இணைந்து பங்கேற்றார். இத்தொடரில் ஜூவாலா, பிரஜக்தா சவாந்துடன் விளையாட முடிவு செய்தார். பிரஜக்தாவுக்கு "விசா' கிடைப்பதில் சிக்கல் ஏற்பட, கலப்பு இரட்டையர் பிரிவு போட்டியில் மட்டும் ஜூவாலா விளையாடினார்.

இங்கிலாந்தில் இருந்து சொந்த ஊருக்கு வந்த அஷ்வினி, இந்திய பாட்மின்டன் சங்கத்துக்கு கடிதம் எழுதினார். இதில், இனிவரும் போட்டிகளில் ஜூவாலாவுடன் இணைந்து விளையாட விருப்பம் இல்லை எனவும், பிரத்னியாவுடன் இணைந்து விளையாட அனுமதி அளிக்கும்படி கேட்டுக் கொண்டார்.

பிரத்னியா கூறுகையில், ""அஷ்வினியின் முடிவு ஆச்சர்யம் அளிக்கிறது. இவருடன் இணைந்து விளையாட இருப்பது சிறந்த அனுபவம்,'' என்றார்.

ஜூவாலாவின் கலப்பு இரட்டையர் ஜோடி திஜு கூறுகையில், ""மீண்டும் கலப்பு இரட்டையரின் இணைந்து விளையாட விருப்பம் தெரிவித்தார். மீண்டும் ஜூவாலாவுடன் இணைந்து விளையாட இருப்பது மகிழ்ச்சி,'' என்றார்.

Friday, 28 September 2012 04:36
Published in News
Written by
Read more... 0

சிட்னி: ஆஸ்திரேலிய ஓபன் பாட்மின்டன் தொடரின் ஒற்றையர் பிரிவு மூன்றாவது சுற்றுக்கு இந்திய வீரர் குருசாய்தத் முன்னேறினார்.

ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரில், ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் பிரிக்ஸ் கோல்டு பாட்மின்டன் தொடர் நடக்கிறது. நேற்று நடந்த ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் குருசாய்தத், தாய்லாந்தின் சுப்பன்யு அவிஹிங்சனான் மோதினர்.

முதல் செட்டை 21-14 எனக் கைப்பற்றிய குருசாய்தத், 2வது செட்டை 18-21 என இழந்தார். பின் எழுச்சி கண்ட இந்திய வீரர், வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டை 21-19 என தன்வசப்படுத்தினார். இறுதியில் குருசாய்தத் 21-14, 18-21, 21-19 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார். மூன்றாவது சுற்றில் குருசாய்தத், உலகின் "நம்பர்-1' வீரரான மலேசியாவின் சோங் வீ லீயை எதிர்கொள்கிறார்.

ஆனந்த் தகுதி:

மற்றொரு 2வது சுற்றுப் போட்டியில் இந்தியாவின் ஆனந்த் பவார், மலேசியாவின் ஜுல்படில் ஜுல்கிபி மோதினர். முதல் செட்டை ஆனந்த் 21-18 எனக் கைப்பற்றினார். பின் காயம் காரணமாக மலேசிய வீரர் விலகுவதாக தெரிவிக்க, ஆனந்த் பவார் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, மூன்றாவது சுற்றுக்கு தகுதி பெற்றார். இதில் ஆனந்த் பவார், மலேசியாவின் வெய் பெங் சோங்கை எதிர்கொள்கிறார்.

மற்றொரு போட்டியில் இந்திய வீரர் அஜய் ஜெயராம் 24-26, 19-21 என்ற நேர் செட் கணக்கில் தென் கொரியாவின் டோங் கெயுன் லீயிடம் தோல்வி அடைந்து வெளியேறினார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சாரதா ஜஸ்டி, ஜப்பானின் யுய் ஹஷிமோடோவை சந்தித்தார். இதில் சாராதா ஜஸ்டி 5-21, 13-21 என்ற நேர் செட் கணக்கில் தோல்வி அடைந்து ஏமாற்றினார்.

Friday, 28 September 2012 04:36
Published in News
Written by
Read more... 0

புதுடில்லி: விஜேந்தர் சிங் போதை விவகாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. போதை கும்பலுக்கு சொந்தமான வீட்டின் முன் விஜேந்தர் காரை நிறுத்தியது போலீசார் தான் என, சக வீரர் தினேஷ் குமார் புகார் கூறியுள்ளார்.

பஞ்சாப்பில் சமீபத்தில் குத்துச்சண்டை வீரர் ராம்சிங்கை, போதைப் பொருள் வைத்திருந்ததாக கைது செய்தனர். இவரிடம் நடத்திய விசாரணையின் பேரில், அனுப் சிங் என்பவரது வீட்டில் இருந்து, ரூ. 130 கோடி மதிப்புள்ள 26 கி.கி., எடையுள்ள போதைப் பொருளான "ஹெராயின்' பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து அனுப் சிங் வீட்டில் ரெய்டு நடந்த போது, பீஜிங் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இந்திய குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் மனைவியின் பெயரில் பதிவு செய்யப்பட்ட கார் வீட்டுக்கு வெளியே நின்றிருந்தது.

இது குறித்து விசாரித்த பஞ்சாப் போலீசார், விஜேந்தர் சிங் 12 முறை போதை மருந்து பயன்படுத்தியதாக கூறினர். விஜேந்தரிடம் பரிசோதனை நடத்தும்படி, தேசிய ஊக்க மருந்து தடுப்பு மையத்துக்கு(நாடா), மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் உத்தரவிட்டது. ஆனால், தங்களது விதிமுறைப்படி "ஹெராயின்' பயன்படுத்தினாரா என சோதனை நடத்த முடியாது என "நாடா' கைவிரித்தது. இதையடுத்து நாடா மற்றும் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

புதிய திருப்பம்:

இதற்கிடையே விஜேந்தர் சிங்கின் நண்பரும் சக வீரருமான தினேஷ் குமார், போலீசார் மீது புகார் கூறியுள்ளார்.

இதுகுறித்து தினேஷ் குமார் கூறியது:

பாட்டியாலாவில் உள்ள தேசிய விளையாட்டு பயிற்சி மையத்தில் இருந்த போது ராம் சிங்கிடம் விசாரனை நடத்த வேண்டும் என பஞ்சாப் போலீசாரிடம் இருந்து அழைப்பு வந்தது. இதனையடுத்து விஜேந்தரின் மனைவியின் பெயரில் பதிவு செய்யப்பட்ட காரில், ராம் சிங்கை அழைத்து போலீஸ் ஸ்டேஷன் சென்றோம். போலீசார் ராமிடம் விசாரனை நடத்த வேண்டும் எனக் கூறினர். அப்போது போலீசார், காரை நிறுத்திவிட்டு செல்லும்படி கூறினர். கார் எங்களுடையது அல்ல என மறுப்பு தெரிவித்த போதும், போலீசார் விடவில்லை. இதனால் காரை ஸ்டேஷனில் நிறுத்தி விட்டு சென்றோம். அன்று மாலை காரை எடுத்து வர மீண்டும் போலீஸ் ஸ்டேஷன் சென்றோம். ஆனால் போலீசார் அனுமதி அளிக்கவில்லை.

மறுநாள், போதை கும்பலுக்கு சொந்தமான வீட்டின் முன் விஜேந்தரின் கார் கண்டெடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது. போலீஸ் ஸ்டேஷனில் நிறுத்தி வைக்கப்பட்ட கார் எப்படி அங்கு வந்தது என அதிர்ச்சி அடைந்தோம். விஜேந்தர் மீது அவப்பெயர் ஏற்படுத்துவதற்காக பஞ்சாப் போலீசார் திட்டமிட்டு இச்செயலை செய்துள்ளனர். இவ்விஷயத்தில் விஜேந்தர் குற்றமற்றவர்.

இவ்வாறு தினேஷ் குமார் கூறினார்.

Friday, 28 September 2012 04:36
Published in News
Written by
Read more... 0

பர்மிங்ஹாம்: ஆஸ்டன் வில்லா அணிக்கு எதிரான பிரிமியர் லீக் கால்பந்து போட்டியில் லிவர்பூல் அணி வெற்றி பெற்றது.

இங்கிலாந்தில் பிரிமியர் லீக் கால்பந்து தொடர் நடக்கிறது. இதன் லீக் போட்டியில் ஆஸ்டன் வில்லா, லிவர்பூல் அணிகள் மோதின. இதன் முதல் பாதியில் ஆஸ்டன் வில்லா அணிக்கு கிறிஸ்டியன் பெனிடிக் (31வது நிமிடம்) ஒரு கோல் அடித்தார். இதற்கு லிவர்பூல் அணி வீரர்களால் பதிலடி கொடுக்க முடியவில்லை.

பின் இரண்டாவது பாதியில் எழுச்சி கண்ட லிவர்பூல் அணிக்கு ஹென்டர்சன் (47) ஒரு கோல் அடிக்க போட்டி சமநிலை வகித்தது. தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய லிவர்பூல் அணிக்கு ஸ்டீவன் ஜெரால்டு (60) "பெனால்டி' வாய்ப்பில் மற்றொரு கோல் அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

முடிவில், லிவர்பூல் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

Friday, 28 September 2012 04:36
Published in News
Written by
Read more... 0

மாட்ரிட்: சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுதிக்கான முதல் சுற்றுப் போட்டியில் ரியல் மாட்ரிட் அணி வெற்றி பெற்றது.

ஐரோப்பிய கால்பந்து கிளப் அணிகள் பங்கேற்கும் யு.இ.எப்.ஏ., சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர், ஐரோப்பாவின் முக்கிய நகரங்களில் நடக்கிறது. ஸ்பெயினில் உள்ள மாட்ரிட் நகரில் நடந்த முதல் சுற்று காலிறுதிப் போட்டியில், ரியல் மாட்ரிட் (ஸ்பெயின்), கலடாசரே (துருக்கி) அணிகள் மோதின.

ஆட்டத்தின் 9வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ முதல் கோல் அடித்தார். தொடர்ந்து அசத்திய ரியல் மாட்ரிட் அணிக்கு 29வது நிமிடத்தில் கரிம் பென்ஜிமா, ஒரு கோல் அடித்து கைகொடுத்தார். இதற்கு கலடாசரே அணியினரால் பதிலடி கொடுக்க முடியவில்லை. முதல் பாதி முடிவில் ரியல் மாட்ரிட் அணி 2-0 என முன்னிலை வகித்தது.

இரண்டாவது பாதியிலும் ஆதிக்கம் செலுத்திய ரியல் மாட்ரிட் அணிக்கு, 73வது நிமிடத்தில் கான்சலோ ஹிகுயன் ஒரு கோல் அடித்து வலுவான முன்னிலை பெற்றுத் தந்தார். கடைசி நிமிடம் வரை போராடிய கலடாசரே வீரர்களால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. ஆட்டநேர முடிவில் ரியல் மாட்ரிட் அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இவ்விரு அணிகள் மோதும் இரண்டாவது சுற்று காலிறுதிப் போட்டி வரும் 9ம் தேதி துருக்கியில் உள்ள இஸ்தான்புல் நகரில் நடக்கவுள்ளது. இதில் கலடாசரே அணி 4-0 என வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதிக்கு முன்னேற முடியும்.

மலகா "டிரா': ஸ்பெயினில் உள்ள மலகா நகரில் நடந்த மற்றொரு முதல் சுற்று காலிறுதிப் போட்டியில் மலகா (ஸ்பெயின்), டார்ட்மண்ட் (ஜெர்மனி) அணிகள் மோதின. இப்போட்டி கோல் எதுவுமின்றி (0-0) "டிரா' ஆனது.

இவ்விரு அணிகள் மோதும் 2வது சுற்று காலிறுதிப் போட்டி ஜெர்மனியில் உள்ள டார்ட்மண்ட் நகரில் வரும் 9ம் தேதி நடக்கவுள்ளது. இதில் வெற்றி பெறும் அணி அரையிறுதிக்கு முன்னேறும்.

Friday, 28 September 2012 04:36
Published in News
Written by
Read more... 0
மெல்போர்ன்: கோல்கட்டா நைட்ரைடர்ஸ் அணியின் ஆஸ்திரேலிய வீரர் ஜேம்ஸ் பட்டின்சன், அடி வயிற்று பகுதியில் "ஆப்பரேஷன்' செய்ய இருப்பதால், ஆறாவது ஐ.பி.எல்., தொடரில் இருந்து விலகினார்.

ஆஸ்திரேலிய அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் பட்டின்சன், 22. கடந்த 2011ம் ஆண்டு ஐ.பி.எல்., தொடரில் கோல்கட்டா நைட்ரைடர்ஸ் அணியில் இடம் பிடித்தார். சமீபத்தில் டெஸ்ட் தொடரில் விளையாட இந்தியாவுக்கு வந்த இவருக்கு, அடிவயிற்றுப் பகுதியில் பிரச்னை ஏற்பட்டது. பின் நாடு திரும்பிய இவர், மருத்துவ பரிசோதனை மேற்கொண்டார். இதில் உடனடியாக "ஆப்பரேஷன்' செய்யும் படி அறிவுறுத்தப்பட்டார். இதனையடுத்து இவர், ஆறாவது ஐ.பி.எல்., தொடரில் இருந்து விலகினார். தவிர இவர், இங்கிலாந்தில் நடக்கவுள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் பங்கேற்பது சந்தேகம். விரைவில் குணமடையும் பட்சத்தில், வரலாற்று சிறப்பு மிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்கலாம். இதன்மூலம் ஆறாவது ஐ.பி.எல்., தொடரில் காயம் காரணமாக விலகிய இரண்டாவது ஆஸ்திரேலிய வீரரானார். முன்னதாக புனே அணியில் இடம் பெற்றுள்ள மைக்கேல் கிளார்க், முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகினார்.

இதுகுறித்து கிரிக்கெட் ஆஸ்திரேலிய (சி.ஏ.,) தலைமை டாக்டர் ஜஸ்டின் கூறுகையில், ""இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய பட்டின்சனுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில் இவர் உடனடியாக "ஆப்பரேஷன்' செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளார். "ஆப்பரேஷனுக்கு' பின், எத்தனை நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என டாக்டர்கள் கூறுவார்கள். இதனால் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடுவது சந்தேகம். ஆனால் ஆஷஸ் தொடரில் பங்கேற்க வாய்ப்பு உள்ளது,'' என்றார்.

Friday, 28 September 2012 04:36
Published in News
Written by
Read more... 0

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் 20 ஆண்டுகளுக்கு மேல் விளையாடியதற்காக மகேஷ் பூபதி உள்ளிட்ட 4 இந்திய வீரர்களுக்கு சர்வதேச டென்னிஸ் சம்மேளனத்தின் (ஐடிஎஃப்) விருது வழங்கப்படுகிறது.

இந்தியாவின் ராமநாதன் கிருஷ்ணன், ஆனந்த் அமிர்தராஜ், ரமேஷ் கிருஷ்ணன் ஆகியோர் விருது பெறும் மற்ற 3 வீரர்கள் ஆவர்.

இது தொடர்பாக கர்நாடக டென்னிஸ் சங்க செயலர் சுந்தர் ராஜு கூறுகையில், "சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் தொடங்கப்பட்டு நூறாண்டுகள் நிறைவடைந்துவிட்டன. நூற்றாண்டுக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக 4 வீரர்களுக்கும் விருது வழங்கப்படுகிறது.

விருது வழங்கும் நிகழ்ச்சி வரும் ஏப்ரல் 6-ம் தேதி கர்நாடக டென்னிஸ் சங்க வளாகத்தில் நடைபெறுகிறது. அகில இந்திய டென்னிஸ் சங்கத்தின் வாழ்நாள் தலைவரான யஷ்வந்த் சின்ஹா, 4 வீரர்களுக்கும் விருது வழங்குகிறார்' என்றார்.

Friday, 28 September 2012 04:34
Published in News
Written by
Read more... 0

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் வியாழக்கிழமை நடைபெறும் லீக் ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ்-பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.

பெங்களூரில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் மும்பை அணி, ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தலைமையிலும், பெங்களூர் அணி, இந்திய அணியின் வருங்கால கேப்டனான விராட் கோலி தலைமையிலும் களமிறங்குகின்றன. இருவருக்குமே கேப்டனாக இது முதல் போட்டி என்பதால், வெற்றியோடு தொடங்கவே விரும்புவார்கள்.

பலம் வாய்ந்த பேட்டிங்: மும்பை இண்டியன்ஸ் அணியைப் பொறுத்தவரையில் சச்சினுடன் வேயன் ஸ்மித் அல்லது ஜேம்ஸ் பிராங்களின் ஆகியோரில் ஒருவர் தொடக்க வீரராக களமிறங்குவார்கள் என்று தெரிகிறது. ஸ்மித், பிராங்க்ளின் இருவரும் பந்துவீச்சிலும் மும்பை அணிக்கு பலம் சேர்க்கிறார்கள். கேப்டன் ரிக்கி பாண்டிங் 3-வது வீரராக களமிறங்கக் காத்திருக்கிறார்.

ரோஹித் சர்மா, அம்பட்டி ராயுடு, தினேஷ் கார்த்திக் என வலுவான மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் உள்ளனர். கடந்த ஐபிஎல் போட்டியில் ராயுடு 333, ரோஹித் சர்மா 433 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.

மலிங்கா இல்லை: வேகப்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் இலங்கையின் லசித் மலிங்கா முதுகு வலியால் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த ஆட்டத்தில் விளையாட மாட்டார் என்று மும்பை அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனினும் முனாஃப் படேல், பிரக்யான் ஓஜா, ஹர்பஜன் சிங் ஆகியோர் பலம் சேர்க்கின்றனர்.

இதுதவிர ரூ. 5.3 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட ஆஸ்திரேலியாவின் ஆல்ரவுண்டர் கிளன் மேக்ஸ்வெல், மேற்கிந்தியத் தீவுகளின் போலார்ட், நியூஸிலாந்தின் ஜேக்கப் ஓரம் போன்ற வீரர்களும் அணியில் உள்ளனர். எனினும் வெளிநாட்டு வீரர்கள் 4 பேரும் மட்டுமே பங்கேற்க முடியும் என்பதால் இவர்கள் அனைவரும் விளையாட முடியாது.

தற்போதைய நிலையில் கேப்டன் ரிக்கி பாண்டிங் விளையாடுவது உறுதி. மலிங்கா இடம்பெறாததால் பிராங்க்ளின், மேக்ஸ்வெல், போலார்ட் ஆகிய 3 வெளிநாட்டு வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள் 3 பேரும் ஆல்ரவுண்டர்கள் என்பதால் பந்துவீச்சிலும் இவர்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். மொத்தத்தில் மும்பை அணி பலம் வாய்ந்த அணியாகும்.

மிரட்டும் கெயில்: இரண்டு முறை இறுதிச்சுற்றுக்கு முன்னேறியபோதும், இதுவரை கோப்பையை வெல்லாத பெங்களூர் அணி இளம் கேப்டனான விராட் கோலி தலைமையில் களமிறங்குகிறது. மேற்கிந்தியத் தீவுகளின் கிறிஸ் கெயில், அந்த அணியின் பேட்டிங்கில் மிகப்பெரிய பலமாகத் திகழ்கிறார். கடந்த ஐபிஎல் போட்டியில் 59 சிக்ஸர்களுடன் அவர் 733 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது. இந்த முறையும் கிறிஸ் கெயிலின் சிக்ஸர் மழை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல் தில்ஷான், ஏ.பி.டிவில்லியர்ஸ், கோலி ஆகியோரும் அந்த அணிக்கு பேட்டிங்கில் பலம் சேர்க்கின்றனர். இவர்களில் டிவில்லியர்ஸ் உள்ளூர் போட்டியில் விளையாடி வருவதால் இந்த ஆட்டத்தில் பங்கேற்கமாட்டார். சேதேஷ்வர் புஜாரா காயத்திலிருந்து முழுமையாக மீளாததால் முதல் போட்டியில் விளையாடுவது சந்தேகமே.

வேகப்பந்து வீச்சில் ஆர்.பி.சிங், வினய் குமார், அபிமன்யூ மிதுன் ஆகியோரும்,  சுழற்பந்து வீச்சில் முத்தையா முரளீதரன், முரளி கார்த்திக் உள்ளிட்டோரும் பலம் சேர்க்கின்றனர்.

ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் வரிசையில் ஆர்.பி.சிங் 74 விக்கெட்டுகளுடன் 3-வது இடத்தில் உள்ளார்.

Friday, 28 September 2012 04:34
Published in News
Written by
Read more... 0

மத்திய அரசு மற்றும் விளையாட்டு அமைப்பின் நிர்வாகிகள் இடையே கருத்தொற்றுமை ஏற்படாததால் ஐ.ஓ.ஏ.-ஐ.ஓ.சி. (சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில்) இடையிலான கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்திய ஒலிம்பிக் சங்க தேர்தலில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாகக் கூறி அச் சங்கத்தை கடந்த டிசம்பரில் இடைநீக்கம் செய்தது சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில். ஐஓஏ மீதான தடையை நீக்குவதற்காக வரும் 15, 16 ஆகிய தேதிகளில் ஸ்விட்சர்லாந்தின் லாசன்னே நகரில் ஐஓசி மற்றும் ஐஓஏ இடையிலான பேச்சுவார்த்தை நடைபெறுவதாக இருந்தது. இந்த நிலையில் ஐஓஏ தலைவர் (பொறுப்பு) மல்ஹோத்ரா, இந்தியாவுக்கான ஐஓசி உறுப்பினர் ரந்திர் சிங், விளையாட்டு அமைச்சக அதிகாரிகள் இடையிலான பேச்சுவார்த்தையில் கருத்தொற்றுமை ஏற்படவில்லை.

இதையடுத்து மத்திய விளையாட்டு அமைச்சர் ஜிதேந்திரா சிங்குக்கு கடிதம் எழுதியுள்ள மல்ஹோத்ரா, "விளையாட்டு வழிகாட்டுதல் நெறிமுறையில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகள், ஐஓசியின் விதிமுறைகளை மீறுவதாக உள்ளதால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது.

எனவே இந்த விவகாரத்தில் மத்திய அரசு தங்களின் நிலையை தெளிவுபடுத்த வேண்டும். நமக்குள் கருத்தொற்றுமை இல்லாமல் லாசன்னே போவதால் எவ்வித பயனும் கிடையாது. அது நமது நாட்டின் பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக அமையும்' என்று குறிப்பிட்டுள்ளார்.

Friday, 28 September 2012 04:34
Published in News
Written by
Read more... 0

வெலிங்டன்: நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் சர்ச்சைக்குரிய வீரர் ஜெசி ரைடர், 28. மர்ம நபர்கள் சிலர் தாக்கியதில் தலை, நுரையீரல் பகுதியில் காயமடைந்த இவர், "கோமா' நிலைக்கு தள்ளப்பட்டார். இதிலிருந்து விரைவில் மீண்ட இவர், ஆஸ்பத்திரியில் இருந்து "டிஸ்சார்ஜ்' ஆனார்.

இது குறித்து ரைடரின் மானேஜர் ஆரோன் கூறுகையில்,""மருத்துமனையில் இருந்து "டிஸ்சார்ஜ்' செய்யப்பட்ட நிலையில், வெலிங்டனுக்கு விமானம் மூலம் சென்றார் ரைடர். சில நாட்கள் வீட்டில் தங்கி ஓய்வு எடுக்க திட்டமிட்டுள்ளார். அவர் சோர்வுடன் காணப்பட்டாலும், வீட்டிற்கு திரும்பியதில் அனைவருக்கும் மகிழ்ச்சி,'' என்றார்.

Friday, 28 September 2012 04:34
Published in News
Written by
Read more... 0

புதுடில்லி: ""தென் ஆப்ரிக்க தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சாதிப்பேன்,'' என, ஷிகர் தவான் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் ஷிகர் தவான், 27. சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மொகாலியில் நடந்த டெஸ்ட் போட்டியில் அறிமுகமான இவர், 85 பந்தில் அதிவேகசதம் அடித்து உலக சாதனை படைத்தார். இப்போட்டியில் பீல்டிங்கின் போது காயமடைந்த இவர், டில்லியில் நடந்த 4வது டெஸ்டில் விளையாடவில்லை. ஐ.பி.எல்., தொடரில் ஐதராபாத் அணியில் இடம் பெற்றுள்ள இவர், காயம் காரணமாக முதல் ஒரு சில போட்டிகளில் பங்கேற்க இயலாது. இந்த ஆண்டு இறுதியில் தென் ஆப்ரிக்காவில் நடக்கவுள்ள டெஸ்ட் தொடரில் பங்கேற்க ஆர்வமாக உள்ளார்.

இதுகுறித்து ஷிகர் தவான் கூறியது: தென் ஆப்ரிக்க தொடர் சவால் நிறைந்ததாக இருக்கும். இத்தொடரை மிகுந்த ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கிறேன். எனது பேட்டிங் ஸ்டைலுக்கு தென் ஆப்ரிக்க ஆடுகளங்கள் சாதகமாக இருக்கும் என்பதால், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சாதிக்கும் வாய்ப்பு உள்ளது. தென் ஆப்ரிக்கா போன்ற வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் வீசப்படும் "பவுன்சர்' பந்துகளை எதிர்கொள்ள காத்திருக்கிறேன்.

தென் ஆப்ரிக்க தொடர் வரும் நவம்பர் மாதம் துவங்கவுள்ளது. இதற்கு இன்னும் நிறைய நாட்கள் இருப்பதால், சிறந்த முறையில் பயிற்சி மேற்கொண்டு தயாராக வேண்டும். அப்போதுதான் வேகப்பந்துவீச்சை சமாளிக்க முடியும்.

இன்னும் இரண்டு வாரத்தில் காயத்தில் இருந்து பூரண குணமடைந்து விடுவேன் என நினைக்கிறேன். அதன்பின் ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்க உள்ளேன். முன்னதாக நடந்த ஐ.பி.எல்., தொடர்களில், தென் ஆப்ரிக்க வேகப்பந்துவீச்சாளர் ஸ்டைனின் பவுலிங்கில் பயிற்சி மேற்கொண்டுள்ளேன். இது, தென் ஆப்ரிக்க தொடருக்கு கைகொடுக்கலாம்.

மொகாலி ஆடுகளம் பேட்டிங்கிற்கு ஒத்துழைப்பு அளித்ததால், வேகமாக ரன் சேர்க்க முடிந்தது. இப்போட்டிக்கு பின், "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின் என்னை வெகுவாக பாராட்டினார். இவரது பாராட்டு, அடுத்து வரும் போட்டிகளில் சாதிக்க தூண்டுகிறது.

டில்லி அணியில் சிறந்த வீரர்கள் நிறைய உள்ளனர். சேவக், காம்பிர் போன்ற அனுபவ வீரர்களுடன் விராத், இஷாந்த் சர்மா உள்ளிட்ட திறமையான இளம் வீரர்கள் இருப்பது பலம் சேர்க்கிறது. வரும் காலங்களில் டில்லி அணியில் இருந்து நிறைய இளம் வீரர்கள் இந்திய அணிக்காக தேர்வு செய்யப்படுவார்கள்.

இவ்வாறு ஷிகர் தவான் கூறினார்.

Friday, 28 September 2012 04:34
Published in News
Written by
Read more... 0

இந்திய அணியின் இளம் "சூப்பர் ஸ்டார்' விராத் கோஹ்லி. சர்வதேச கிரிக்கெட் அரங்கில் மிக விரைவான வளர்ச்சி கண்டுள்ளார். டெஸ்ட், ஒருநாள் போட்டி, "டுவென்டி-20' என அனைத்திலும் முத்திரை பதிக்கும் இவர், எதிர்கால கேப்டனாக போற்றப்படுகிறார்.

அனுபவ சச்சின், தோனிக்கு பிறகு விளம்பரங்களில் நடிப்பதன் மூலம் ஆண்டுக்கு ரூ. 100 கோடி சம்பாதிக்கிறார் கோஹ்லி. ஒரு பொருளுக்கு விளம்பர "மாடலாக' தோன்ற ரூ. 5 கோடி வரை சம்பளமாக பெறுகிறார். இப்படி கோடிகளில் புரளும் இவர், மிகுந்த இரக்க குணம் கொண்டவர். ஏழை குழந்தைகளுக்கு <உதவ வேண்டும் என்ற லட்சியத்துடன் "விராத் கோஹ்லி அறக்கட்டளையை' துவக்கியுள்ளார்.

இது குறித்து கோஹ்லி கூறியது:

இந்தியாவில் நிறைய குழந்தைகள் ஒருவேளை சாப்பாட்டுக்கூட வசதி இல்லாமல் மிகவும் கஷ்டப்படுகின்றனர். இத்தகைய குழந்தைகளுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் நீண்ட நாட்களாக இருந்தது. அதனால் விராத் கோஹ்லி தொண்டு நிறுவனத்தை துவக்கி உள்ளேன். இதன் மூலம் கல்வி மற்றும் விளையாட்டு துறைகளிலும் சாதிக்க துடிக்கும் இளம் குழந்தைகளுக்கு உதவ முடியும்.

கிரிக்கெட்டில் பல சாதனைகள் படைத்துள்ளேன். ஆனாலும், என் சேவை அமைப்பு மூலம் ஒரு குழந்தை தன் லட்சியத்தை எட்டினால், அதை தான் என் வாழ்நாளில் மிகச் சிறந்த சாதனையாக கருதுவேன். எனது அறக்கட்டளைக்கு நிதி திரட்டும் நிகழ்ச்சிகளை விரைவில் நடத்த உள்ளேன்.

இவ்வாறு கோஹ்லி கூறினார்.

Friday, 28 September 2012 04:34
Published in News
Written by
Read more... 0

வதோதரா: பூனம் ராத், திருஷ் காமினி ஜோடி அரை சதம் அடித்து கைகொடுக்க, இந்திய பெண்கள் அணி, வங்கதேசத்தை 49 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இந்தியா வந்துள்ள வங்கதேச பெண்கள் அணி 3 "டுவென்டி-20' போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி, நேற்று வதோதரா மைதானத்தில் நடந்தது. "டாஸ்' வென்ற வங்கதேச அணி அணி கேப்டன் சல்மா காட்டுன் பீல்டிங் தேர்வு செய்தார்.

இந்திய அணிக்கு பூனம் ராத், திருஷ் காமினி அதிரடி துவக்கம் அளித்தனர். இந்த ஜோடியால், அணியின் ஸ்கோர் "ஜெட்' வேகத்தில் உயர்ந்தது. பவுண்டரிகளாக விளாசிய, பூனம் ராத், "டுவென்டி-20' அரங்கில் தனது 3வது அரை சதத்தை பதிவு செய்தார். மறுமுனையில், தமிழக வீராங்கனை காமினி "டுவென்டி-20' அரங்கில் தனது முதல் சதத்தை எட்டினார். முதல் விக்கெட்டுக்கு 130 ரன்கள் சேர்த்தபோது, காமினி 56 ரன்களில் ஆட்டமிழந்தார். 75 ரன்கள் கடந்த பூனம் ராத், சல்மாவிடம் விக்கெட்டை பறிகொடுத்தார். கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (3) ஏமாற்றினார். முடிவில் இந்திய அணி 20 ஓவரில், 3 விக்கெட்டுக்கு 143 ரன்கள் எடுத்தது. வங்கதேச அணி சார்பில் சல்மா 3 விக்கெட் வீழ்த்தினார். நிரஞ்சனா (1), மோனா மேஷ்ராம் (1) அவுட்டாகாமல் இருந்தனர்.

கடின இலக்கை துரத்திய வங்கதேச அணிக்கு சகானாஸ் பர்வீன் (13), பர்சானா (9), சுகுத்ரா (7) நிலைக்கவில்லை. ஆனாலும், தனி வீராங்கனையாக கேப்டன் சல்மா போராடினார். இருப்பினும், இவர் நல்ல "பார்ட்டனர்ஷிப்' இல்லாமல் தவித்தார். ருமானா (8), ஜகானாரா (1) சொதப்பினர். தொடர்ந்து, மற்ற வீராங்கனைகளும் ஒற்றை இலக்கில் வெளியேறினர். முடிவில், வங்கதேச அணி 20 ஓவரில், 7 விக்கெட்டுக்கு 94 ரன்கள் எடுத்து, தோல்வியடைந்தது. கேப்டன் சல்மா (49), பானா ஜோஸ் (3) அவுட்டாகாமல் இருந்தனர்.

இந்திய அணி சார்பில் நிரஞ்சனா, அர்ச்சனா தாஸ், ரீது துரூவ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இரு அணிகள் மோதும் இரண்டாவது போட்டி நாளை, இதே இடத்தில் நடக்கிறது.

Friday, 28 September 2012 04:34
Published in News
Written by
Read more... 0

கோல்கட்டா: ஆறாவது ஐ.பி.எல்., தொடரை "நடப்பு சாம்பியன்' கோல்கட்டா நைட் ரைடர்ஸ் அணி அமர்க்களமாக துவக்கியது. நேற்றைய லீக் போட்டியில் டில்லி அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. "சுழலில்' அசத்திய சுனில் நரைன், கோல்கட்டா அணியின் வெற்றிக்கு கைகொடுத்தார்.

ஆறாவது ஐ.பி.எல்., தொடர் நேற்று துவங்கியது. கோல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த முதல் லீக் போட்டியில் கோல்கட்டா நைட்ரைடர்ஸ், டில்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதின. "டாஸ்' வென்ற கோல்கட்டா அணி கேப்டன் காம்பிர், "பீல்டிங்' தேர்வு செய்தார்.

நரைன் ஜாலம்:

டில்லி அணிக்கு பிரட் லீ வீசிய முதல் பந்திலேயே "அடி' விழுந்தது. இளம் உன்முக்த் சந்த் (0) பரிதாபமாக போல்டாக, தனது வழக்கமான "ஸ்டைலில்' பிரட் லீ துள்ளிக் குதித்தார். சுனில் நரைன் "சுழலில்' வார்னர் (21) அவுட்டானார். அடுத்து வந்தவர்கள் சொதப்பினர். மன்பிரித் ஜுனிஜா (8), பாலாஜியிடம் சரணடைந்தார். நமன் ஓஜா (9), போத்தா (7) ஆகியோர் ரஜத் பாட்யா பந்தில் வெளியேறினர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இர்பான் பதான் (4), நரைன் "சுழலில்' சிக்கினார். சேவக், கெவின் பீட்டர்சன் இல்லாததால் ஸ்கோர் உயர வாய்ப்பு இல்லாமல் போனது.

ஜெயவர்தனா அரைசதம்:

தனிநபராக போராடிய ஜெயவர்தனா, தனது 9வது ஐ.பி.எல்., அரைசதத்தை பதிவு செய்தார். இவர் 66 ரன்கள் எடுத்த போது பிரட் லீ பந்தில் அவுட்டானார். ஆன்ட்ரூ ரசல் (4), நெஹ்ரா (0) நிலைக்கவில்லை. ஜெயவர்தனா, வார்னர் தவிர மற்றவர்கள் ஒற்றை இலக்கத்தை தாண்ட முடியாததால், டில்லி அணி 20 ஓவரில் 128 ரன்கள் மட்டும் எடுத்தது.

கோல்கட்டா சார்பில் சுனில் நரைன் 4 விக்கெட் கைப்பற்றினார்.

காம்பிர் அதிரடி:

சுலப இலக்கை விரட்டிய கோல்கட்டா அணிக்கு துவக்கத்தில் பிஸ்லா(4) ஏமாற்றினார். பின் காம்பிர் அதிரடியாக ஆடினார். இர்பான் பதான் ஓவரில் வரிசையாக ஒரு பவுண்டரி, சிக்சர் அடித்தார். நதீம் பந்தில் காலிஸ்(23) அவுட்டானார். அடுத்து வந்த மனோஜ் திவாரி ஒத்துழைக்க, காம்பிர் சிரமமின்றி ரன் சேர்த்தார். போத்தா பந்தில் காம்பிர்(42) வெளியேறினார். திவாரி 23 ரன்களுக்கு நதீம் "சுழலில்' சிக்கினார். பின் யூசுப் பதான்(18*), மார்கன்(14*) சேர்ந்து வெற்றியை உறுதி செய்தனர். கோல்கட்டா அணி 18.4 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 129 ரன்கள் எடுத்து சுலப வெற்றி பெற்றது.

ஆட்ட நாயகன் விருதை நரைன் தட்டிச் சென்றார்.

ஜெயவர்தனா "1500'

பொறுப்பாக ஆடிய டில்லி அணி கேப்டன் மகிளா ஜெயவர்தனா, ஐ.பி.எல்., அரங்கில் 1500 ரன்கள் என்ற மைல்கல்லை நேற்று எட்டினார். இந்த இலக்கை அடைந்த 16வது வீரரானார். இதுவரை இவர், 66 போட்டியில் பங்கேற்று ஒரு சதம், 9 அரைசதம் உட்பட 1537 ரன்கள் எடுத்துள்ளார்.

சேவக் எங்கே

முதுகு வலியால் அவதிப்படும் டில்லி அணியின் சேவக், நேற்று கோல்கட்டாவுக்கு வரவில்லை. கேப்டனாக ஜெயவர்தனா நியமிக்கப்பட்டதால், இவர் மிகுந்த அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்டது. இதனை மறுத்த சேவக் கூறுகையில்,""முதுகு வலி காரணமாக தான் முதல் போட்டியில் பங்கேற்கவில்லை. இன்று டில்லியில் பயிற்சியில் ஈடுபட முடிவு செய்துள்ளேன்,''என்றார்.

ஷாருக், தீபிகா உற்சாகம்

நேற்றைய போட்டியை காண பாலிவுட் நட்சத்திரங்கள் அக்ஷய் குமார், இம்ரான் கான், சோனாக்ஷி வந்திருந்தனர். கோல்கட்டா அணி உரிமையாளரும் நடிகருமான ஷாருக் கான், தீபிகா படுகோனேவுடன் சேர்ந்து மைதானத்தை வலம் வந்து, தனது அணியின் வெற்றியை கொண்டாடினார்.

Monday, 13 August 2012 19:11
Published in News
Written by
Read more... 0

ஐதராபாத்: ""இந்திய "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சினுக்கு பந்துவீசுவதன் மூலம் சிறந்த பாடம் கற்றுக் கொள்ளலாம்,'' என, மும்பை இந்தியன்ஸ் அணியின் சுழற்பந்துவீச்சாளர் பிரக்யான் ஓஜா தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் இடது கை சுழற்பந்துவீச்சாளர் பிரக்யான் ஓஜா, 26. சமீபத்தில் டில்லியில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்டில், ஜேம்ஸ் பட்டின்சனை அவுட்டாக்கிய இவர், டெஸ்ட் அரங்கில் குறைந்த போட்டியில் 100 விக்கெட் வீழ்த்திய மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமை பெற்றார். இதுவரை இவர் 22 டெஸ்ட் போட்டியில் பங்கேற்று 102 விக்கெட் கைப்பற்றி உள்ளார். ஆறாவது ஐ.பி.எல்., தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடுகிறார்.

இதுகுறித்து பிரக்யான் ஓஜா கூறியது: ஐ.பி.எல்., தொடர் இளம் வீரர்கள் தங்களது திறமையை நிரூபிக்க கிடைத்த சிறந்த மேடையாக திகழ்கிறது. கடந்த 2008ல் நடந்த முதலாவது ஐ.பி.எல்., தொடரில் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட போது, உள்ளூர் போட்டிகளில் மட்டும் விளையாடினேன். ஐ.பி.எல்., தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, தேசிய அணியில் இடம் பிடித்தேன். ஒவ்வொரு அணியிலும் உள்ள சீனியர் வீரர்களிடம் இருந்து இளம் வீரர்கள் கிரிக்கெட் குறித்த நிறைய விஷயங்களை பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். இந்த அனுபவம் போட்டியில் சாதிக்க உதவும்.

முதல் நான்கு தொடர்களில் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக விளையாடிய போது சிறப்பாக (54 போட்டி, 60 விக்கெட்) பந்துவீசினேன். கடந்த ஆண்டு மும்பை அணிக்காக விளையாடிய போது லேசான பின்னடைவை சந்தித்தேன். அதன்பின் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் எழுச்சி கண்டு, இழந்த "பார்மை' மீட்டேன்.

மும்பை அணியில் இணைந்த பின், "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சினுடன் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தது. பயிற்சி முகாமில் இவருக்கு பந்துவீசுவதன் மூலம், நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன். பவுலிங் குறித்து சச்சின் வழங்கிய ஆலோசனைகள் போட்டியில் சாதிக்க கைகொடுத்தது. இவர் சிறந்த வீரராக மட்டமல்லாமல், நல்ல மனிதராகவும் இருப்பது சிறப்பம்சம்.

இம்முறை எங்கள் அணியின் ஆலோசகராக அனுபவ சுழற்பந்துவீச்சாளர் அனில் கும்ளே நியமிக்கப்பட்டுள்ளார். இவரது வருகையால் எங்கள் அணியில் உள்ள சுழற்பந்துவீச்சாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இவரிடம் இருந்து சுழற்பந்துவீச்சு குறித்து நிறைய விஷயங்களை கற்றுக் கொள்ள ஆர்வமாக இருக்கிறேன். இதன்மூலம் சிறந்த பவுலராக வலம் வர வாய்ப்பு உள்ளது.

கேப்டனாக ஆஸ்திரேலியாவின் பாண்டிங் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், ஆஸ்திரேலியாவுக்கு இரண்டு முறை உலக கோப்பை பெற்றுத் தந்துள்ளார். இம்முறை, மும்பை அணியை திறம்பட வழிநடத்தி, முதன்முறையாக ஐ.பி.எல்., கோப்பை வென்று தருவார் என நம்புகிறேன்.

எங்கள் அணியில் உள்ள மற்றொரு அனுபவ சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங், இளம் வீரர்களுக்கு முன்னோடியாக விளங்குகிறார். இவரிடம் இருந்து நிறைய விஷயங்களை பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

பயிற்சியாளர் ஜான் ரைட், இந்திய அணியை எழுச்சிப் பாதைக்கு கொண்டு சென்றார். இதேபோல இம்முறை மும்பை இந்தியன்ஸ் அணியை வெற்றிப் பாதையில் கொண்டு செல்வார் என நினைக்கிறேன். தவிர இம்முறை பேட்டிங்கிலும் கவனம் செலுத்தி வருகிறேன். இதற்கு ஜான் ரைட் நிறைய ஆலோசனைகள் வழங்கினார். இது போட்டியில் சாதிக்க உதவும்.

இவ்வாறு பிரக்யான் ஓஜா கூறினார்.

Monday, 13 August 2012 19:10
Published in News
Written by
Read more... 0

பெங்களூரு,: ""ஆறாவது ஐ.பி.எல்., தொடரில் விளையாடும் லெவன் அணியில் இடம் பிடிக்க விரும்புகிறேன்,'' என, பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியின் ரவி ராம்பால் தெரிவித்துள்ளார்.

ஆறாவது ஐ.பி.எல்., தொடர் இன்று முதல் வரும் மே 26ம் தேதி வரை நடக்கிறது. பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நாளை நடக்கவுள்ள லீக் போட்டியில் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

இதுகுறித்து பெங்களூரு அணியின் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ரவி ராம்பால் கூறியது: ஆறாவது ஐ.பி.எல்., தொடரை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன். ஒவ்வொரு போட்டியிலும், விளையாடும் லெவன் அணியில் இடம் பிடிக்க விரும்புகிறேன். பெங்களூரு அணியில் உள்ள பேட்ஸ்மேன்கள் நல்ல "பார்மில்' உள்ளனர். இந்திய மண்ணில் இரண்டு டெஸ்ட், ஒரே ஒரு ஒருநாள் போட்டியில் விளையாடி உள்ளேன். இந்த அனுபவத்தை கொண்டு, ஐ.பி.எல்., போட்டியில் சிறப்பாக செயல்படுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. எங்கள் அணியில் கிறிஸ் கெய்ல் இருப்பது மிகப் பெரிய பலம்.

இவ்வாறு ரவி ராம்பால் கூறினார்.

Monday, 13 August 2012 19:09
Published in News
Written by
Read more... 0

பாரீஸ்:பார்சிலோனா, பாரீஸ் செயிண்ட் ஜெர்மியன் அணிகள் மோதிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி "டிரா' ஆனது.

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்த சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் பார்சிலோனா, பாரீஸ் செயிண்ட் ஜெர்மியன் அணிகள் மோதின. இதில் துவக்கம் முதல் அசத்திய பார்சிலோனா அணிக்கு நட்சத்திர வீரர் மெஸ்சி (38வது நிமிடம்) ஒரு கோல் அடித்தார். இதற்கு முதல் பாதியில் பாரீஸ் செயிண்ட் அணி வீரர்கள் பதிலடி கொடுக்கவில்லை.

பின் இரண்டாவது பாதியில் அசத்திய பாரீஸ் செயிண்ட் அணிக்கு இப்ராகிமோவிக் (79) முதல் கோல் அடித்தார். இதற்கு பார்சிலோனாவின் சேவி (89) "பெனால்டி' வாய்ப்பில் பதிலடி கொடுக்க, பார்சிலோனா அணி முன்னிலை பெற்றது. பின் பாரீஸ் செயிண்ட் அணியின் பிலாசி (90+4) கடைசி நேரத்தில் ஒரு கோல் அடித்து கைகொடுத்தார்.

முடிவில், போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் "டிரா' ஆனது. மற்றொரு போட்டியில், பேயர்ன் முனிச், ஜீவன்டஸ் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

Monday, 13 August 2012 19:08
Published in News
Written by
Read more... 0
Share on Myspace

Recommended Articles

Prev Next

எதுவும் நினைவில் இல்லை

எதுவும் நினைவில் இல்லை

வெலிங்டன்: நியூசிலாந்து அணியின் சர்ச்சைக்குரிய வீரர் ஜெ...

டேவிட் ஹசி எதிர்பார்ப்பு

டேவிட் ஹசி எதிர்பார்ப்பு

புதுடில்லி: ""ஐ.பி.எல்., அரங்கில் மீண்டும் ஒரு முறை கில...

பாட்மின்டன் விருது

பாட்மின்டன் விருது

கோலாலம்பூர்:உலக பாட்மின்டன் கூட்டமைப்பு (பி.டபிள்யு...

அஷ்வினியின் புதிய ஜோடி

அஷ்வினியின் புதிய ஜோடி

ஐதராபாத்: பாட்மின்டன் இரட்டையர் பிரிவு போட்டிகளில், இந்...

குருசாய்தத் முன்னேற்றம்

குருசாய்தத் முன்னேற்றம்

சிட்னி: ஆஸ்திரேலிய ஓபன் பாட்மின்டன் தொடரின் ஒற்றையர...

விஜேந்தர் சிங் போதை விவகாரம்

விஜேந்தர் சிங் போதை விவகாரம்

புதுடில்லி: விஜேந்தர் சிங் போதை விவகாரத்தில் புதிய திரு...

லிவர்பூல் அணி வெற்றி

லிவர்பூல் அணி வெற்றி

பர்மிங்ஹாம்: ஆஸ்டன் வில்லா அணிக்கு எதிரான பிரிமியர் லீக...

ரியல் மாட்ரிட் வென்றது

ரியல் மாட்ரிட் வென்றது

மாட்ரிட்: சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுதிக்...

ஆஸ்திரேலிய வீரர் ஜேம்ஸ் பட்டின்…

 ஆஸ்திரேலிய வீரர் ஜேம்ஸ் பட்டின்சன்

மெல்போர்ன்: கோல்கட்டா நைட்ரைடர்ஸ் அணியின் ஆஸ்திரேலிய வீ...

ஐடிஎஃப் விருது

ஐடிஎஃப் விருது

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் 20 ஆண்டுகளுக்கு மேல் ...

மும்பை-பெங்களூர் மோதல்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் வியாழக்கிழமை நடைபெறும் லீக...

ஐஓஏ-ஐஓசி கூட்டம் ஒத்திவைப்பு

மத்திய அரசு மற்றும் விளையாட்டு அமைப்பின் நிர்வாகிகள் இட...

வீடு திரும்பினார் ரைடர்

வீடு திரும்பினார் ரைடர்

வெலிங்டன்: நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் சர்ச்சைக்குர...

ஷிகர் தவான் நம்பிக்கை

ஷிகர் தவான் நம்பிக்கை

புதுடில்லி: ""தென் ஆப்ரிக்க தொடரில் சிறப்பான ஆட்டத்தை...

லட்சியம் நிச்சயம் வெல்லும்

லட்சியம் நிச்சயம் வெல்லும்

இந்திய அணியின் இளம் "சூப்பர் ஸ்டார்' விராத் கோஹ்லி. சர்...

இந்திய அணி வெற்றி

இந்திய அணி வெற்றி

வதோதரா: பூனம் ராத், திருஷ் காமினி ஜோடி அரை சதம் அடித்து...

நரைன் சுழலில் டில்லி காலி

நரைன் சுழலில் டில்லி காலி

கோல்கட்டா: ஆறாவது ஐ.பி.எல்., தொடரை "நடப்பு சாம்பியன்' க...

சச்சினிடம் இருந்து பாடம்

சச்சினிடம் இருந்து பாடம்

ஐதராபாத்: ""இந்திய "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சினுக்கு...

லெவன் அணியில் இடம்

லெவன் அணியில் இடம்

பெங்களூரு,: ""ஆறாவது ஐ.பி.எல்., தொடரில் விளையாடும் லெவன...

பார்சிலோனா "டிரா'

பார்சிலோனா

பாரீஸ்:பார்சிலோனா, பாரீஸ் செயிண்ட் ஜெர்மியன் அணிகள் மோத...

புல்ஹாம் வெற்றி

புல்ஹாம் வெற்றி

லண்டன்:குயின்ஸ் பார்க் ரேஞ்சர்ஸ் அணிக்கு எதிரான பிரிமிய...

பலோடெலியின் புது காதலி

பலோடெலியின் புது காதலி

இத்தாலி கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் மரியோ பலோடெலி...

ஆன்டி முர்ரே சாம்பியன்

ஆன்டி முர்ரே சாம்பியன்

மியாமி: மியாமி மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில், இங்கிலாந்தின...

முரளி கார்த்திக்

முரளி கார்த்திக்

பெங்களூரு: ஆறாவது ஐ.பி.எல்., தொடரில் சுழற்பந்துவீச்சாளர...

நான் சச்சின் ரசிகன்

நான் சச்சின் ரசிகன்

நான் சச்சினின் தீவிர ரசிகன். இவரிடம் இருந்து நிறைய விஷய...

எழுச்சி பெற்ற ஜடேஜா

எழுச்சி பெற்ற ஜடேஜா

மும்பை:ஆஸ்திரேலிய தொடரில் யாருமே எதிர்பாராத வகையில், வி...

கோலிவுட்டில் கோமல்

கோலிவுட்டில் கோமல்

ஸ்குவாஷ் வீராங்கனை கோமல் சர்மா, முழுவேகத்தில் தமிழ் சின...

விஜய் படத்தில் நடிக்க நிஷா மறுப்…

விஜய் படத்தில் நடிக்க நிஷா மறுப்பு!!

விஜய் நடிக்கும் ஜில்லா படத்தில், மகத் ஜோடியாக நடிக்க நட...

கொல்கத்தா ரைடர்ஸ் வெற்றி

கொல்கத்தா ரைடர்ஸ் வெற்றி

இந்தியன் பிரீமியர் லீக் போட்டியின் முதல் ஆட்டத்தில் கொல...

Login

Register

*
*
*
*
*

* Field is required